Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2021: அந்த மூன்று வீரர்களுக்கு 'டார்கெட்'.. KKR கனவு பலிக்குமா?

மும்பை: ஐபிஎல் 2021 சீசனை முன்னிட்டு, அணியில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் விதமாக கேகேஆர் அணி மூன்று புதிய வீரர்களை எடுக்க ஆலோசித்து வருகிறது.

கடந்த ஐபிஎல் 2020 சீசனில், அருமையான தொடக்கம் கொடுத்து அதன்பிறகு சரமாரியாக சொதப்பிய அணி என்றால் அது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தான்.

கோடிகளை கொட்டிக் கொடுத்து எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ் முதல் ஆந்த்ரே ரஸல் வரை அனைவரும் ஏகபோகத்துக்கு சொதப்ப, தினேஷ் கார்த்திக்கின் கேப்டன் பதவியும் தொடரின் பாதியிலேயே பறிக்கப்பட்டது.

இந்நிலையில், தனது அணியின் கட்டமைப்பை சரி செய்ய இந்தாண்டுக்கான சீசனில் மூன்று வீரர்களை வாங்க கொல்கத்தா பரிசீலிப்பதாக தெரிகிறது.

 ஓப்பனிங் சொதப்பல்

ஓப்பனிங் சொதப்பல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று மெகா ஸ்லோ 'ஓப்பனிங்'. ஒவ்வொரு அணியும் வலிமையான தொடக்க வீரர்களை கட்டமைத்து விளையாட, போன சீசனில் ஓப்பனிங்கில் சொதப்பியது கொல்கத்தாவும், சென்னையும் தான்.

 மறுபடியும் க்றிஸ் லின்

மறுபடியும் க்றிஸ் லின்

இதனால், தனது தொடக்கத்தை பலப்படுத்த அதிரடி பேட்ஸ்மேன் க்றிஸ் லின்-ஐ கொல்கத்தா வாங்க முயற்சிக்கலாம். இவர் ஏற்கனவே கொல்கத்தா அணிக்கு தான் விளையாடினார். ஆனால், அதன்பிறகு மும்பை வாங்க, அங்கு பெரும்பாலும் பென்ஞ்சில் தான் உட்கார்ந்திருக்கிறார்.

 எதிரணிகளின் டவுசரை கழட்டுவாரா லுங்கி?

எதிரணிகளின் டவுசரை கழட்டுவாரா லுங்கி?

சென்னை அணிக்காக தோனியால் விரும்பி வாங்கப்பட்ட வீரர். ஆனால், இவர் நேரமோ அல்லது சிஎஸ்கே நேரமோ, மஞ்சள் அணிக்காக இவரால் தன் முழு திறமையை வெளிப்படுத்தி எதிரணிகளின் மாஞ்சாவை எடுக்க முடியவில்லை. இரண்டு ஓவர்சீஸ் பவுலர்களை வைத்திருக்கும் கேகேஆர், லுங்கியை ஒரு backup வீரராக வைத்திருக்க வாங்கலாம்.

 வயசானாலும் மாஸ்டர் தான்

வயசானாலும் மாஸ்டர் தான்

வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் என்று இரண்டு லெக் ஸ்பின்னர்ஸ் இருந்தாலும், ஒரு சீனியர் ஸ்பின்னர் அணிக்கு தேவை என்பதால் அமித் மிஸ்ரா ஒரு வேல்யூ ஆப்ஷனாக இருக்க வாய்ப்புண்டு. ஸோ, 38 வயதான மிஸ்ராவுக்கு இம்முறையும் ஐபிஎல் வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

Story first published: Friday, February 5, 2021, 13:02 [IST]
Other articles published on Feb 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+