Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிசயம் நிகழ்த்துவாரா ரிங்கு சிங்.. கேகேஆர் அதிரடியை சமாளிக்குமா ஐதராபாத்.. கொல்கத்தா பிட்ச் எப்படி?

கொல்கத்தா: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி விளையாட உள்ளது. இரு அணிகளும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளதால், தங்களது வெற்றிப் பயணத்தை யார் தொடர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

16வது ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடுகிறது. முதல் போட்டியில் பஞ்சாப் அணிடம் தோல்வியடைந்த கொல்கத்தா அணி, அடுத்த இரு போட்டிகளில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிராக அபார வெற்றி பெற்றது.

Kolkata Knight riders to play against Sunrisers Hyderabad at Eden Gardens in IPL 2023

பெங்களூரு அணிக்கு எதிராக ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குரின் அதிரடி அரைசதம் மற்றும் குஜராத் அணிக்கு எதிராக ரிங்கு சிங்கின் கடைசி ஓவர் சிக்சர்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. கற்பனை செய்ய முடியாத இரு ஆட்டங்களில் தோல்வியின் பிடியில் இருந்து எழுச்சி பெற்று கொல்கத்தா அணி வெற்றிபெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் தொடக்கத்திலேயே இதுபோன்ற வெற்றியை கொல்கத்தா அணி பெற்றுள்ளதால், கேகேஆர் அணி அபாயகர அணியாக பார்க்கப்படுகிறது. இதேபோல் அதிரடியை நீட்டிக்கும் முனைப்புடன் ஆயத்தமாகும் கொல்கத்தாவுக்கு சொந்த ஊரில் ஆடுவது கூடுதல் பலமாக உள்ளது. சுனில் நரின், வருண் சக்கரவர்த்தி, சுயாஷ் ஷர்மா ஆகியோரின் சுழற்பந்துவீச்சை ஐதராபாத் அணி எப்படி சமாளிக்க போகிறது என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. அதேபோல் கேகேஆர் அணியிம் ரஸ்ஸல் இன்றைய போட்டியில் எப்படி ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மறுபக்கம் ஐதராபாத் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ ஆகிய அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே உத்வேகத்துடன் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. இதுவரை முதல் 3 போட்டிகளிலும் சொதப்பிய ஹாரி புரூக் இன்றைய ஆட்டத்திலாவது நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோல் மார்க்ரம், ராகுல் த்ரிப்பாட்டி, கிளாஸன், மயங்க் அகர்வால் உள்ளிட்டோரும் ஃபார்மில் இருப்பதால், கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களுக்கும், ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்களுக்குமான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கொல்கத்தா பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த போட்டியிலும் அதே நிலை தான் நீடித்தது. இதனால் ஹை ஸ்கோரிங் த்ரில்லராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, April 14, 2023, 9:12 [IST]
Other articles published on Apr 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+