Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KKR vs KXIP: கெயில்? இல்ல.... ரசல்? இன்றைய ஆட்டத்தில் மிரட்ட போவது யார்?

கொல்கத்தா:ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனானஆட்டத்தின் போது ஜாஸ் பட்லரை,மன்கட் முறையில் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெரும் விவாதத்துக்கு உள்ளான பொருளாகவும் அவரது செய்கை அமைந்துள்ளதாகவும் கருத்துகள் எழுந்தன.

1
45762

இந்த பரபரப்பான சூழலில், கொல்கத்தா அணியை பஞ்சாப் எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் யுனிவர்சஸ் பாஸ், சிக்சர் மன்னன் கிறிஸ் கெயில் 79 ரன்கள் விளாசினார். சர்ப்ராஸ் கானும் அதிரடியாக களத்தில் நின்று 46 ரன்கள் சேர்த்தார். அவர்கள் இருவரும் இன்றும் சூறாவளி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

நம்பிக்கையான பேட்டிங்

நம்பிக்கையான பேட்டிங்

கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன், மன்தீப் சிங் ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது சமி, முஜிபுர் ரஹ்மான், அங்கித் ராஜ்புத் ஆகியோர் ஜொலிக்கக்கூடும்.

தவான் ஆட்டம் வீண்.. வாட்சன் அசத்தல்! ஜாதவ், தோனியால் தேவையற்ற பரபரப்பு.. கடைசி ஓவரில் சென்னை வெற்றி!

கொல்கத்தா உற்சாகம்

கொல்கத்தா உற்சாகம்

கொல்கத்தா அணியும் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் விளையாட உள்ளது. கடந்த ஆட்டத்தில் கிறில் லின், உத்தப்பா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங்கில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வில்லை.

அதிரடி இன்னிங்ஸ்

அதிரடி இன்னிங்ஸ்

ராணா, ரசல், சுப்மான் கில் ஆகியோர் அதிரடியால் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினர். அவர்களிடம் இருந்து இன்றும் ஒரு அருமையான இன்னிங்சை எதிர்பார்க்கலாம்.

அதிக பனிப்பொழிவு

அதிக பனிப்பொழிவு

ஈடன் கார்டன் மைதானம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக இருக்கும். ஆட்டத்தின் 2ம் பாதியில் பனிப் பொழிவு சற்று அதிகமாக காணப்படும். வெப்ப நிலை 25 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

உத்தேச அணி

உத்தேச அணி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச லெவன்: நிதிஷ் ராணா, கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, சுபமன் கில், ஜோ டெண்லி, தினேஷ் கார்த்திக் , ஆண்ட்ரே ரசல், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, லோகி பெர்குசன்.

அணியில் யார்?

அணியில் யார்?

கிங்ஸ் லெவன் பஞ்சாப் உத்தேச லெவன்: கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், மயான்க் அகர்வால், சர்பராஸ் கான், டேவிட் மில்லர், மன்தீப் சிங், சாம் கிர்ரன், ரவிச்சந்திரன் அஸ்வின், முஜிபுர் ரஹ்மான், முகமது ஷமி, அங்கித் ராஜ்புத்.

Story first published: Wednesday, March 27, 2019, 17:45 [IST]
Other articles published on Mar 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+