Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KKR vs SRH: தமிழக வீரரை அதிரடியாக நீக்கிய ஐதராபாத்.. டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு!

கொல்கத்தா: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

16வது ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. கொல்கத்தா அணி இரு பிரம்மாண்ட வெற்றிகளுக்கு பின் சொந்த மண்ணில் களமிறங்கியுள்ளது. அதேபோல் ஐதராபாத் அணி பஞ்சாப் அணியை வீழ்த்திய பின், கொல்கத்தா அணிக்கு எதிராக களமிறங்கியுள்ளது.

Kolkata won the toss and chose to bowl against Hyderabad in IPL 2023

இந்த நிலையில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். கொல்கத்தா மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்கையில் அதிகளவு பனிப்பொழிவு இருக்கும் என்பதால், கொல்கத்தா அணி சேஸிங்கை தேர்வு செய்துள்ளது. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் மீண்டும் கொல்கத்தா அணி களமிறங்கியுள்ளது.

அதிரடி வீரர் வெங்கடேஷ் ஐயர் மீண்டும் இம்பேக்ட் பிளேயராகவே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தமிழக வீரர் ஜெகதீசனுக்கு மீண்டும் தொடக்க வீரராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐதராபாத் அணியில் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு, இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

Kolkata won the toss and chose to bowl against Hyderabad in IPL 2023

கொல்கத்தா அணி விவரம்: குர்பாஸ், ஜெகதீசன், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், சுயாஷ் சர்மா, ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி

ஐதராபாத் அணி விவரம்: ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் த்ரிப்பாட்டி, எய்டன் மார்க்ரம், அபிஷேக் சர்மா, கிளாஸன், மார்கோ யான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்க்கண்டே, உம்ரான் மாலிக், நடராஜன்

Story first published: Friday, April 14, 2023, 19:12 [IST]
Other articles published on Apr 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+