Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னா அடி..! மரண மாஸ்..! 39 பந்துகளில் சதம், 13 சிக்ஸ், 8 விக்..! டி 20ல் சாதித்த ஐபிஎல் வீரர்

பெங்களூரு: 39 பந்துகளில் சதம் அடித்த கர்நாடக வீரர் கிருஷ்ணப்பா கவுதம், 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி டி-20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்து இருக்கிறார்.

கர்நாடக பிரீமியர் லீக் டி 20 கிரிக்கெட் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஒரு போட்டியில் பெல்லாரி டஸ்கர்ஸ் அணியும் ஷிவ மோகா அணியும் மோதின.

பெல்லாரி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடுபவர் கிருஷ்ணப்பா கவுதம். பேட்டிங்கில் களமிறங்கிய கிருஷ்ணப்பா கவுதம் அதிரடியாக விளையாடி 39 பந்தில் சதம் அடித்தார். பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் மூலமாக மட்டுமே 106 ரன்களை சேர்த்த அவர், மொத்தம் 56 பந்துகளில் 134 ரன்கள் குவித்தார்.

7 விக். சாதனை

7 விக். சாதனை

பின்னர் பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை அள்ளி சாதனை படைத்தார். இது டி 20 தொடரில் சாதனை. இங்கிலாந்து வீரர் காலின் ஆக்கர்மன் 7 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதை முறியடித்திருக்கிறார் கிருஷ்ணப்பா கவுதம்.

அங்கீகாரம் இல்லை

அங்கீகாரம் இல்லை

டி20 போட்டியில் அவர் எடுத்த ரன்கள் சிறந்தவை. ஆனால், மாநில டி20 லீக்குகளுக்கு அதிகாரப்பூர்வ டி20 அந்தஸ்து இல்லை. எனவே, இது அதிகாரப்பூர்வ பதிவாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த போட்டிக்கு ஐசிசியின் அங்கீகாரம் கிடையாது என்ற போதிலும், சாதனைக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மிக்க மகிழ்ச்சி

மிக்க மகிழ்ச்சி

இந்தச் சாதனை குறித்து கவுதமும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: இதை எதிர்பார்க்கவில்லை. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றார். நீங்கள் அதிகம் ரசித்தது பந்துவீச்சையா, பேட்டிங்கையா என்று கேள்வி எழுப்பிய போது, எனது தோழியின் புன்னகையை என்று கூறினார்.

முறியடித்த சாதனை

முறியடித்த சாதனை

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வரும் இவர் அந்த அணிக்கும் ஒரு சில போட்டிகளை தவிர, மற்ற ஆட்டங்களில் அதிரடியாக ஆடியிருக்கிறார். கர்நாடக டி 20 போட்டியில் ஒரு அபார ஆட்டத்தை ஆடி உலகில் பல சாதனைகளை முறியடித்துள்ளார். ஒரே போட்டியில் சதம் அடித்தும் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். இதுவரை டி20 போட்டிகளில் எந்த ஒரு வீரரும் இப்படியான சாதனையை படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, August 24, 2019, 13:26 [IST]
Other articles published on Aug 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+