Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம ரொமான்டிக் சம்பவம்.. பைனலில் சாதித்த கையோடு காதலை சொன்ன இந்திய கிரிக்கெட் வீரர்.. ஷாக்கான காதலி!

மும்பை : இந்திய அணி வீரர் க்ருனால் பண்டியா தன் காதலை பன்குரி சர்மாவிடம் மிக ரொமான்டிக்கான முறையில் கூறி உடனே ஓகே வாங்கிய சம்பவம் பற்றி அவர்கள் இருவருமே கூறி உள்ளனர்.

க்ருனால் பண்டியா - பன்குரி சர்மா கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதற்கு முன்பாக இருவரும் நீண்ட நாள் காதலித்து வந்தனர்.

2017 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வாங்கிய உடன், திட்டம் போட்டு பன்குரி சர்மாவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி தன் காதலை சொல்லி இருக்கிறார் க்ருனால் பண்டியா.

பண்டியா சகோதரர்கள்

பண்டியா சகோதரர்கள்

இந்திய அணியில் பண்டியா சகோதரர்கள் பற்றி அனைவருக்குமே தெரியும். இருவரும் அதிரடி ஆட்டக்காரர்கள் தான். ஹர்திக் பண்டியா இந்திய அணியில் முதலில் நுழைந்து விட்டாலும், க்ருனால் பண்டியா கடந்த ஆண்டு அணியில் வாய்ப்பு பெற்றார்.

இந்திய அணியில் வாய்ப்பு

இந்திய அணியில் வாய்ப்பு

அதற்கு முன்னதாக இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடி வந்தனர். ஹர்திக் பண்டியா அப்போதே இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். க்ருனால் பண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் மட்டுமே ஆடி வந்தார்.

2017 ஐபிஎல் இறுதிப் போட்டி

2017 ஐபிஎல் இறுதிப் போட்டி

2017 ஐபிஎல் இறுதிப் போட்டியில் ரைஸிங் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆடியது மும்பை இந்தியன்ஸ் அணி. அந்தப் போட்டியில் முக்கியமான கட்டத்தில் 47 ரன்கள் குவித்து தன் அணியை வெற்றி பெற வைத்தார் க்ருனால் பண்டியா.

ஆட்ட நாயகன்

ஆட்ட நாயகன்

அவர் ஆடிய அபார ஆட்டம் காரணமாக அவருக்கு இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அந்த சிறப்பான தருணத்தை மேலும் சிறப்பாக்க திட்டம் போட்டுள்ளார் க்ருனால் பண்டியா. அதற்கு வெற்றிக் களிப்பில் இருந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்களை அழைத்துள்ளார்.

அன்று என்ன நடந்தது?

அன்று என்ன நடந்தது?

க்ருனால் பண்டியாவின் அறையில் பன்குரி சர்மாவை அழைத்து வந்து இருந்தார் ஹர்திக் பண்டியா. அடுத்து சிறிது நேரத்தில் க்ருனால் பண்டியா, அனைத்து மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் அந்த அறைக்குள் நுழைந்துள்ளார்.

இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி

அப்போது பன்குரி சர்மாவிடம் காதலை சொன்ன க்ருனால் பண்டியா, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். இந்த இன்ப அதிர்ச்சியை எதிர்பார்க்காத பன்குரி சர்மா முதலில் ஷாக் ஆனாலும், உடனே ஓகே சொல்லி இருக்கிறார்.

எப்படியும் ஒப்புக் கொள்வார்

எப்படியும் ஒப்புக் கொள்வார்

இது பற்றி கூறிய க்ருனால் பண்டியா சில சமயம் பந்துவீச்சாளர் எங்கே பந்தை வீசுகிறார் என நமக்கு தெரியும். அதே போலத் தான் இதுவும். அவர் எப்படியும் ஒப்புக் கொள்வார் என எனக்கு தெரியும் என்றார் க்ருனால். செம ரொமான்டிக் திட்டம் போட்டு திருமணத்துக்கு சம்மதம் வாங்கி உள்ளார் க்ருனால் பண்டியா.

Story first published: Monday, April 13, 2020, 22:53 [IST]
Other articles published on Apr 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+