3 பந்தில் 2 விக்கெட்டுகள்.. முதல் ஓவரிலேயே தடம் பதித்த குல்தீப், அக்சர் பட்டேல்.. தடுமாறும் இலங்கை
கொல்கத்தா : இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கிற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் ரன்கள் குவித்து பிறகு பந்தவீச்சு மூலம் நெருக்கடி அளிக்க கேப்டன் ஷனாகா திட்டமிட்டார்.
இலங்கை அணியில் 2 தலை சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து, இந்தியா சேஸிங் செய்யும் போது நெருக்கடி தரலாம் என்பதே ஷனாகாவின் திட்டமாக இருந்திருக்கலாம்.
ஆனால், இங்கு பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் முதலில் பந்துவீசுவதே சரியான தேர்வாக இருந்திருக்கும். ஆனால், இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் 350 ரன்களுக்கு மேல் குவித்து விடும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டது.

முகமது சிராஜ் அபாரம்
இலங்கை அணியிலிருந்து நிசாங்கா நீக்கப்பட்டு, அறிமுக வீரராக நுவானிந்து பெர்னான்டோ சேர்க்கப்பட்டார். இவருடன் களமிறங்கிய அவிஸ்கா பெர்னான்டோ, பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தார். இந்த நிலையில், முகமது சிராஜ் ஆட்டத்தின் 6வது ஓவரில் அவிஸ்கா பெர்னான்டோவை 20 ரன்களில் போல்ட் ஆனார்.

குல்தீப் அட்டாக்
இதனையடுத்து 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குசேல் மெண்டிஸ், நுவானிந்து உடன் ஜோடி சேர்ந்து பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தார். இந்த ஜோடிநிதானமாக விளையாடி எந்த நெருக்கடியையும் இல்லாமல் இருந்தனர். இதன் காரணமாக இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தது.

அக்சர் தாக்கம்
இதனையடுத்து, வேகப்பந்துவீச்சு எடுபடாததால் குல்தீப் யாதவை பந்துவீச ரோகித் சர்மா அழைத்தார். ரோகித்தின் இந்த முடிவு நல்ல பயனை அளித்தது. குல்தீப் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் வீழ்ந்தது. சிறப்பாக விளையாடிய குசேல் மெண்டிஸ் 34 ரன்களுக்கு எல்பிடபிள்யூ ஆனார்.

குல்தீப் மேஜிக்
இதனைத் தொடர்ந்து அக்சர் பட்டேலுக்கு ரோகித் சர்மா ஓவர் கொடுக்க, அவர் தனது 2வது பந்திலேயே தனஞ்செய்ய டி சில்வாவை போல்ட் ஆக்கினார். இதன் காரணமாக மூன்று பந்து இடைவெளியில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்தது. அறிமுக வீரராக களமிறங்கிய நுவானிந்து அரைசதம் எடுத்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அசலங்காவும் குல்தீப்பிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க. ஷனாகா போல்ட் ஆனார். இலங்கை அணி 126 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.


Click it and Unblock the Notifications