Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியில் வெல்லுமா? பத்திரிகையாளர் கேள்வி.. குல்தீப் யாதவின் நச் பதில்

சட்டோகிராம் : வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்தினார்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 404 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து குல்தீப் யாதவின் அபார பந்துவீச்சால் அந்த அணி 150 ரன்களுக்கு சுருண்டது.

குல்தீப் யாதவ் 16 ஓவர் வீசி 40 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இந்திய அணி ஃபாலோ ஆன் செய்யாமல் 2வது இன்னிங்சில் களமிறங்கியது.

513 ரன்கள் இலக்கு

513 ரன்கள் இலக்கு

கேஎல் ராகுல் 23 ரன்களில் ஆட்டமிழக்க, தொடக்க வீரர் சுப்மான் கில், தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இதனைத் தொடர்ந்து புஜாரா 4 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச போட்டியில் சதம் விளாசினார். இதனால் இந்திய அணி 2வது இன்னிங்சில் 258 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

வெற்றி பெறுமா?

வெற்றி பெறுமா?

இதனையடுத்து, 513 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம், 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது. இந்த நிலையில், இன்னும 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 471 ரன்கள் தேவைப்படுகிறது.

மாறிய ஆடுகளம்

மாறிய ஆடுகளம்

மூன்றாவது நாள் தொடக்கத்தில் இருந்த ஆடுகளம் சற்று பேட்டிங்கிற்கு சாதகமாக செயல்படுவது போல் தெரிகிறது. வங்கதேச அணியின் சுழற்பந்துவீச்சு சற்றும் எடுப்படாத நிலையில், புஜாரா கூட 132 பந்துகளில் 102 ரன்கள் அடித்திருக்கிறார் இந்த நிலையில் ஆட்ட நேரம் முடிந்த உடன் குல்தீப் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார்.

நச் பதில்

நச் பதில்

அப்போது வங்கதேச பத்திரிகையாளர் ஒருவர் குல்தீப் யாதவிடம், இந்தப் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெறுமா என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த குல்தீப் யாதவ், நான் வங்கதேசம் வெற்றி பெற கூடாது என்று ஆசைப்படுகிறேன் என்று கூற, அங்கு சிரிப்பலை எழுந்தது. இதனைத் தொடர்ந்து பேசிய அவர், நாளை யாராவது முச்சதம் விளாசினால் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நாங்கள் 10 விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சி செய்வோம். அது தான் எங்கள் குறிகோள் என்று கூறினார்.

Story first published: Friday, December 16, 2022, 22:32 [IST]
Other articles published on Dec 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+