Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிவேகமாக 12,000 ரன்கள்... சச்சின் சாதனையை முறியடித்த சங்கக்காரா!

வெலிங்டன்: டெஸ்ட் போட்டியில், அதி விரைவாக 12 ஆயிரம் ரன்களை தொட்டு, இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், படைத்திருந்த சாதனையை, இலங்கை பேட்ஸ்மேன் குமார் சங்கக்காரா முறியடித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்த அணி சுற்றுப்பயணத்தை தொடங்கும் முன்பு, அணியின் முன்னணி வீரரும், விக்கெட் கீப்பருமான குமார் சங்கக்காரா, டெஸ்ட் போட்டிகளில் 11 ஆயிரத்து 988 ரன்களை எடுத்திருந்தார். கிறிஸ்ட்சர்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இறு இன்னிங்சுகளிலும் சேர்த்து சங்கக்காரா 7 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

Kumar Sangakkara breaks Sachin Tendulkar's record

வெலிங்டன்னில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின்போது 12 ஆயிரம் ரன்களை கடக்க சங்கக்காராவுக்கு 5 ரன்களே தேவைப்பட்டது. அதை முதல் இன்னிங்சிலேயே சங்கக்காரா கடந்தார். 224 டெஸ்ட் இன்னிங்சுகளில் விளையாடி சங்கக்காரா 12 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.

ஆனால் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் ஆகியோர் 12 ஆயிரம் டெஸ்ட் ரன்களை கடக்க 247 இன்னிங்சுகள் தேவைப்பட்டது. சங்கக்காரா குறைந்த போட்டியில் 12 ஆயிரம் ரன்களை கடந்ததன் மூலம், 2008ல் சச்சின் படைத்த அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரன்கள் வரையில், அதி விரைவாக எட்டிய பெருமை சச்சினிடமே இன்னும் மிஞ்சியுள்ளது.

Story first published: Monday, January 5, 2015, 10:28 [IST]
Other articles published on Jan 5, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+