Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன இப்படி இறங்கிட்டாங்க... இந்த முறை கோப்பை நிச்சயமோ.. பஞ்சாப் அணி திடீர் முடிவு

மும்பை : ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதிரடி மாற்றத்துடன் களமிறங்கவுள்ளது.

ஐபிஎல் 14வது சீசன் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதனால் அனைத்து அணிகளும் தயாராகி வருகிறது.

இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்தாண்டு கோப்பையை வெல்ல வேண்டும் என புதிய முடிவை எடுத்துள்ளது.

பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் சீசனில் அரையிறுதி வரை சென்று வெளியேறியது. 2014ம் ஆண்டு இறுதி சுற்றுக்கு சென்று தோற்றது. மற்றபடி ஒரு முறை கூட அந்த அணி கோப்பையை வென்றுள்ளது.

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

இந்த முறை கோப்பையை வென்றாக வேண்டும் என்பதால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயர் பஞ்சாப் கிங்ஸ் என மாற்றப்பட்டுள்ளது. இதனை அணியின் இணை உரிமையாளர் மோஹித் பர்மன் உறுதி செய்துள்ளார். மேலும் அணியின் பெயர் மாற்றத்திற்கான அறிமுக நிகழ்ச்சியை பெரியளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 ஏலம்

ஏலம்

இந்தாண்டுகான ஐபிஎல் வீரர்கள் ஏலம் நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை பல வீரர்கள் விடுவிக்கப்பட்டு ரூ. 53.2 கோடி கையிருப்பு வைத்துள்ளது. இதனால் ஏலத்தில் திறமையான வீரர்களை அணிக்குள் சேர்த்து அதிரடி காட்ட திட்டமிட்டுள்ளது.

உரிமை

உரிமை

மோஹித் பர்மன், நெஸ் வாடியா, பிரீத்தி ஜிந்தா, கரண் பால் ஆகியோர் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களாக உள்ளனர். இனிமேலும் அணியில் தோல்வி நிலை தொடரக் கூடாது என்பதற்காகப் புத்தம் புதுப் பொலிவுடன் அணி களமிறக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Story first published: Thursday, February 18, 2021, 8:36 [IST]
Other articles published on Feb 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+