Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர் என்ன பிராக்டீஸ் பண்றாருன்னு நீங்களே பாருங்க மக்களே! பயிற்சியில் கிறிஸ் கெயில் அட்டகாசம்!

Recommended Video

பயிற்சியின் போது டான்ஸ் ஆடிய கிறிஸ் கெய்ல்-வீடியோ

சண்டிகர் : கிறிஸ் கெயில் இல்லாத ஐபிஎல் தொடரா? என இந்திய ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு, கிறிஸ் கெயில் அதிரடி ஆட்டத்தைப் பார்க்கவென்றே தனிக் கூட்டம் உள்ளது.

களத்தில் மட்டுமல்லாமல், போட்டிக்கு வெளியேயும் கிறிஸ் கெயில் ரசிகர்களை குஷிப்படுத்த தவறுவதில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

கெயில் செய்த வால்த்தனம்

கெயில் செய்த வால்த்தனம்

இந்தப் போட்டியில் கிறிஸ் கெயில் 24 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார். அதில் 4 சிக்ஸர்கள் அடங்கும். இந்த சிக்ஸர்கள் மூலம் ஐபிஎல் தொடரில் 300 சிக்ஸர்கள் என்ற அரிய சாதனையை செய்தார் கெயில். இந்த சாதனை செய்வதற்கு முன் இந்த போட்டிக்கான பயிற்சியின் போது கெயில் செய்த வால்த்தனம் ஒன்று வீடியோவில் வெளியாகி உள்ளது.

வீரர்கள் பயிற்சி

வீரர்கள் பயிற்சி

போட்டி துவங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன் பஞ்சாப் வீரர்கள் சிலர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். அனைவரும் பயிற்சிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கிறிஸ் கெயில் பவுண்டரி கோட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்தார்.

பாங்க்ரா நடனம்

இல்லை, இல்லை. ஆடிக் கொண்டு இருந்தார். பஞ்சாப்பின் பாங்க்ரா இசைக்கு ஏற்ப நடன அசைவுகளை கொடுத்துக் கொண்டு சிறப்பாக பயிற்சி செய்து கொண்டிருந்தார் கெயில். இந்த பயிற்சியை முடித்து விட்டு தான் நான்கு சிக்ஸர்கள் அடித்தார்.

சிக்ஸர் மன்னன்

சிக்ஸர் மன்னன்

கெயில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அடித்த நான்கு சிக்ஸர்களோடு சேர்த்து 302 ஐபிஎல் சிக்ஸர்கள் அடித்துள்ளார். மேலும், 4133 ஐபிஎல் ரன்கள் அடித்துள்ளார் கெயில். மேலும், ஆறு ஐபிஎல் சதங்கள் அடித்துள்ளார் இந்த சிக்ஸர் மன்னன்.

Story first published: Sunday, March 31, 2019, 0:26 [IST]
Other articles published on Mar 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+