For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடடே.. பெயரும், பௌலிங்கும் ஒரே மாதிரி.. யுவராஜ் சிங்கை திணற வைத்த “அஸ்வின்கள்” கூட்டணி!!

சண்டிகர் : 2019 ஐபிஎல் தொடரின் 9வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

பஞ்சாப் அணியின் வெற்றியில் சுழற் பந்துவீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், முருகன் அஸ்வின் இருவரும் முக்கிய பங்காற்றினர். கடந்த போட்டியில் பஞ்சாப் அணியின் பந்துவீச்சு மோசமாக இருந்தது. கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மோசமாக ரன்களை வாரி இறைத்திருந்தார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் எப்படி?

ரவிச்சந்திரன் அஸ்வின் எப்படி?

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரன்களைக் கட்டுப்படுத்தி அசத்தியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். முந்தைய போட்டியில் 4 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்தவர், இந்த போட்டியில் 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

முருகன் அஸ்வின் 2 விக்கெட்

முருகன் அஸ்வின் 2 விக்கெட்

முருகன் அஸ்வின் இந்த ஐபிஎல் தொடரில் தன் முதல் போட்டியில் ஆடினார். அருமையாக பந்துவீசிய அவர் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் சாய்த்தார். இரண்டு அஸ்வின்கள் பெயரும் ஒரே மாதிரி இருந்தது போல ரன்களைக் கட்டுப்படுத்துவதிலும் இருவரும் ஒரே மாதிரி செயல்பட்டனர்.

சராசரி 6 ரன்கள்சராசரி 6 ரன்கள்

சராசரி 6 ரன்கள்சராசரி 6 ரன்கள்

மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங் ஆகிய இரண்டு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்தினார் முருகன் அஸ்வின். மற்ற மூன்று பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 10 ரன்கள் கொடுத்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின், முருகன் அஸ்வின் இருவரும் சராசரியாக ஓவருக்கு 6 ரன்கள் மட்டுமே கொடுத்தனர்.

யுவராஜ் சிங் வீழ்ந்தது எப்படி?

யுவராஜ் சிங் வீழ்ந்தது எப்படி?

முதல் இரண்டு போட்டிகளில் பட்டையைக் கிளப்பி வந்த யுவராஜ் சிங் இந்தப் போட்டியில் ரன் குவிக்காமல் ஆட்டமிழக்க இவர்கள் இருவருமே காரணம். இந்தப் போட்டியில் நன்றாக ஆடத் துவங்கிய யுவராஜ் சிங், அடுத்தடுத்து இரண்டு அஸ்வின்களின் ஓவர்களை எதிர்கொண்டு ரன் அடிக்க முடியாமல் திணறினார். பின்னர் முருகன் அஸ்வின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

Story first published: Saturday, March 30, 2019, 21:07 [IST]
Other articles published on Mar 30, 2019
English summary
KXIP vs MI : Ravichandran Ashwin and Murugan Ashwin played a crucial role
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+