For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டி.. பஞ்சாப் அதிரடி வெற்றி!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று நடந்தது.

By Shyamsundar

மும்பை: ஐபிஎல் தொடரில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று நடந்தது. இதில் பஞ்சாப் அணி அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் அணி 7 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதில் பஞ்சாப் அணி கிட்டதட்ட பிளே ஆப் சுற்றுக்கு தகுதியாகிடவிட்டது என்று கூறலாம். இந்த நிலையில் இன்று பஞ்சாப் அணிக்கும் மோசமான நிலையில் இருக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையில் போட்டி நடந்தது.

KXIP wins the match against RR in IPL 2018

சாம்பியன் ஆக கஷ்டப்படும் பஞ்சாப் அணி அஸ்வின் தலைமையில் இன்று எப்படியாது வெற்றி வெற்றி பெறவேண்டும் என்று ஆடியது. ராஜஸ்தான் பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெறுவது கஷ்டம் என்ற நிலையில்தான் போட்டி தொடங்கியது. இந்த நிலையில் முதலில் ஆடிய ராஜஸ்தான் தொடக்கத்தில் திணற தொடங்கியது. பின் நிதானமாக ஆடியது.

இந்த போட்டியில் பஞ்சாப் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. எப்போதும் போல ராஜஸ்தான் சொதப்பியது. பட்லர் மட்டும் அதிரடியாக ஆடினார். இவர் ரன்கள் 51 எடுத்தார். ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது.

அடுத்த களமிறங்கிய பஞ்சாப் அதிரடியாக ஆடியது. ராகுல் 84 ரன்கள் எடுத்தார். நாயர் 31 ரன்கள் எடுத்தார். இதனால் பஞ்சாப் 18.4 ஓவரில் 4 விக்கெட்டிற்கு 153 ரன்கள் இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.

Story first published: Sunday, May 6, 2018, 23:36 [IST]
Other articles published on May 6, 2018
English summary
KKR wins the match against Mumbai in IPL 2018
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+