Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வந்துட்டான்யா ஜூனியர் மலிங்கா.. பல்தான்ஸ்-க்கு இனி கவலையே இல்லை.. மும்பை இந்தியன்ஸ் பதிவிட்ட வீடியோ!

நியூயார்க்: இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்காவின் மகன் டுவின் மலிங்கா பந்துவீசும் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அவரும் மலிங்காவை போலவே பந்துவீசுவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக 13 சீசன்கள் விளையாடி அந்த அணி 5 முறை கோப்பை வெல்வதற்கு காரணமாக அமைந்தவர் லசித் மலிங்கா. வித்தியாசமான ஆக்‌ஷனும், துல்லியமான யார்க்கரையும் கொண்டு உலகின் எந்தவொரு வீரரின் விக்கெட்டையும் கண் இமைக்கும் நொடிகளில் சாய்க்கும் திறமை கொண்டவர் லசித் மலிங்கா.

Lasith Malinga Son Duvin Malinga hits the Middle Stump during Net practice video is Trending

2007 காலகட்டத்தில் மலிங்கா உச்சத்தில் இருந்த போது இலங்கை கிரிக்கெட் அணி அடுத்தடுத்து உலகக்கோப்பை இறுதிப்போட்டி தகுதிபெற்றது. 145 கிமீ வேகத்தில் யார்க்கர் வீசினால், பேட்ஸ்மேன் நிச்சயம் அவுட் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம். அந்த அளவிற்கு லசித் மலிங்காவிடம் துல்லியமும் திறமையும் இருந்தது. ஆனால் காயத்தால் அவரின் வேகம் குறைந்த போது சிறிய பின்னடைவை சந்தித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியும், மும்பை அணியின் மலிங்காவின் இடத்தை நிரப்ப முடியாமல் இன்றுவரை திண்டாடி வருகின்றனர். அதேபோல் மலிங்கா போல் 145கிமீ வேகத்தில் வீசும் பந்துவீச்சாளரை கண்டறிந்த போது, சென்னை அணியின் கேப்டன் தோனி அவரை உடனடியாக களமிறக்கினார். கடந்த சீசனில் பதிரானாவை தோனி எப்படி பாதுகாத்தார் என்பதை பார்த்திருந்தாலே, மலிங்காவின் தாக்கம் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளலாம்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற மலிங்கா, ராஜஸ்தான் மற்றும் மும்பை நியூயார்க் அணிகளுக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் மலிங்காவின் மகனான டுவின் மலிங்கா பந்துவீசும் வீடியோவை மும்பை அணி நிர்வாகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் டுவின் மலிங்கா, அப்படியே தந்தையை போல் அதே ஆக்‌ஷனில் பந்துவீசுகிறார்.

இதனை பின்னிருந்து பார்க்கும் மலிங்கா, ஆக்‌ஷன் சரியாக உள்ளது. நேர்கோட்டில் சரியான வேகத்துடன் வீசத் தொடங்கினால், அடுத்தடுத்து திறனை மேம்படுத்தலாம் என்று சொல்கிறார். லசித் மலிங்கா தனது கருத்தை சொல்லிக் கொண்டிருந்த போது, டுவின் மலிங்கா வீசிய பந்து மிடில் ஸ்டம்பை தட்டி சென்றது.

இதனால் உற்சாகமான மலிங்கா தனது மகனை பாராட்டினார். ஏற்கனவே சச்சின் மகனான அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் மலிங்கா மகனையும் ஒப்பந்தம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. டுவின்மலிங்காவின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Story first published: Monday, July 24, 2023, 17:30 [IST]
Other articles published on Jul 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+