Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடந்த ரெண்டு போட்டிகள்ல விட்டத நேற்றைய போட்டியில புடிச்சுட்டேன்... உற்சாகத்தில் டெல்லி வீரர்

அகமதாபாத் : ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி கொண்டது.

இந்த போட்டியில் டெல்லி அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் ஹீரோவாக செயல்பட்டு அணியை வெற்றி பெற செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த போட்டியில் தான் சிறப்பாக விளையாடியது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் வெற்றி

டெல்லி கேபிடல்ஸ் வெற்றி

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றை போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து புள்ளிகள் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்துள்ளது.

தெறித்து ஓடிய பஞ்சாப் பௌலர்கள்

தெறித்து ஓடிய பஞ்சாப் பௌலர்கள்

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை அடித்திருந்தது. அந்த அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் அவுட்டாகாமல் 99 ரன்களை அடித்திருந்தார். ஆயினும் டெல்லி அணி வீரர்களின் பேட்டிங்கின் முன்னால் அந்த அணியின் பௌலர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை.

டெல்லி வீரர்கள் அதிரடி

டெல்லி வீரர்கள் அதிரடி

டெல்லி அணியின் துவக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் இருவரும் முறையே 39 மற்றும் 69 ரன்களை குவித்தனர். ஸ்டீவ் ஸ்மித்தும் 24 ரன்களை அடித்திருந்தார். இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் எளிதான இலக்கை 3 விக்கெட்டுகள் இழப்பிற்கே டெல்லி வீரர்கள் சிறப்பாக அடைந்தனர்.

ஷிகர் தவான் முதலிடம்

ஷிகர் தவான் முதலிடம்

இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஷிகர் தவானின் அதிரடியை அடுத்து அவர் ஆரஞ்ச் கேப்பிற்கான ஓட்டத்தில் முதலிடத்தை பிடித்துள்ளார். கேஎல் ராகுல் முதலிடத்தில் இருந்த நிலையில், அவர் நேற்றைய போட்டியில் விளையாடாததை அடுத்து ஷிகர் முதலித்தை பிடித்துள்ளார்.

நேற்றைய போட்டியில் சிறப்பு

நேற்றைய போட்டியில் சிறப்பு

இதனிடையே, கடந்த இரு போட்டிகளில் தன்னுடைய ஸ்டிரைக் ரேட் சிறப்பாக இல்லை என்றும் நேற்றைய போட்டியில் அது சிறப்பாக மாறியுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த தொடரில் அவர் தொடர்ந்து நிலையான போட்டிகளை டெல்லி அணிக்காக அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 3, 2021, 21:03 [IST]
Other articles published on May 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+