
யார் டிரெவர் பெய்லிஸ்?
இதனை அடுத்து பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அணில் கும்ப்ளே அண்மையில் விலகினார். இந்த நிலையில் இன்று புதிய தலைமை பயிற்சியாளராக டிரெவர் பெய்லிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த டிரெவர் பெய்லிஸ் இங்கிலாந்து அணி 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

2 ஐபிஎல் கோப்பை
கொல்கத்தா அணிக்கு தலைமை பயிற்சியாளராக 2012 முதல் 14 ஆம் ஆண்டு வரை டிரெவர் பெய்லிஸ் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் கொல்கத்தா அணி இரண்டு முறை ஐபிஎல் பட்டத்தை வென்றது. இதேபோன்று பிக் பேஸ் லீக்கில் சிட்னி 6 அணிக்காக சாம்பியன் பட்டத்தையும் வென்று தந்துள்ளார். கடைசியாக 2020 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்காக பயிற்சியாளராக பெய்லிஸ் பணியாற்றினார்.

கருத்து
அப்போது சன்ரைசர்ஸ் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. எனினும் 2021 ஆம் ஆண்டில் 14 போட்டிகளில் வெறும் மூன்று வெற்றியை மட்டுமே சன்ரைசர்ஸ் பெற்றதை அடுத்து பெய்லிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தற்போது பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக அவர் திரும்பி உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்றுள்ளது பெரும் கௌரவமாக கருதுகிறேன்.

கும்ப்ளே சொதப்பல்
பஞ்சாப் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் பசியில் காத்திருக்கிறது. அந்த அணியின் திறமையான வீரர்களுடன் இணைந்து முதல் கோப்பையை வெல்ல பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார். இதனிடையே அணில் கும்ப்ளேவுக்கும் பஞ்சாப் அணி நிர்வாகத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதனாலே அவர் விலகியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து விராட் கோலி உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகிய நிலையில், தற்போது பஞ்சாப் அணியிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனால் பயிற்சியாளராக கும்ப்ளே சோபிக்கவில்லை என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications