ஐபிஎல் 2021 இந்தியாவில நடந்தாலும் 5 இடங்கள்லதான் நடக்குமாம்... ஆலோசனையில் பிசிசிஐ!
டெல்லி : கடந்த ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக செப்டம்பர் மாதத்தில் அதிலும் யூஏஇயில் நடத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போதே ஐபிஎல் 2021 தொடருக்கான ஏற்பாடுகளை பிசிசிஐ முடுக்கி விட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் ஐபிஎல் 2021க்கான ஏலம் நடத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டாலும் 5 இடங்களில் மட்டுமே நடத்தப்பட உள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

யூஏஇயில் நடத்தப்பட்ட தொடர்
ஐபிஎல் 2020 தொடர் கடந்த ஆண்டில் கொரோனா காரணமாக கடுமையான பாதிப்பிற்கு உள்ளானது. நீண்ட ஆலோசனைக்கு பிறகு கடந்த மார்ச் மாதத்தில் இந்த தொடர் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதிலும் இந்தியாவில் நடத்தப்படாமல் யூஏஇயில் ரசிகர்கள் அற்ற காலி மைதானத்தில் இந்த தொடர் நடத்தப்பட்டது.

சில தினங்களில் ஐபிஎல் ஏலம்
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான பணிகள் தற்போது முதலே முடுக்கிவிடப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் ஐபிஎல் ஏலம் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. வீரர்களுக்கான குறைந்தபட்ச ஏலத்தொகையும் 1.5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

கவனத்துடன் செயல்படும் பிசிசிஐ
ஆயினும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை மிகவும் கவனத்துடன் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த தொடர் நடத்தப்படுமா அல்லது கடந்த ஆண்டை போல யூஏஇயில் நடத்தப்படுமா என்பது குறித்து இன்னும் திட்டமிடப்படவில்லை. ஆயினும் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்கள்
அவ்வாறு இந்தியாவில் ஐபிஎல் 2021 தொடர் நடத்தப்பட்டாலும் முக்கியமாக ஐந்து இடங்களில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. அகமதாபாத், மும்பை, பெங்களூரு, சென்னை மற்றும் கொல்கத்தா போன்ற இடங்களில் மட்டுமே போட்டிகள் பயோ பபள் விதிமுறைகளுடன் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications