Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை வந்து இறங்கினார் கால்பந்தின் 'பாட்ஷா' மெஸ்ஸி.. குழந்தைகளுடன் Football விளையாடினார்

மும்பை: பிரபல கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி தற்போது மும்பைக்கு வந்து இறங்கி இருக்கிறார். The Goat என்று அழைக்கப்படும், இந்த சுற்றுப்பயணத்தில் மெஸ்ஸி கொல்கத்தா, ஹைதராபாத்,மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

நேற்று கொல்கத்தாவில் ரசிகர்களை மைதானத்தில் சந்திக்க மெஸ்ஸி வந்த போது பல குறைபாடுகள் இருந்தன. இதனால் மெஸ்ஸி அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியில் இருந்து கிளம்பி சென்று விட்டார். இதனால் ரசிகர்கள் மைதானத்தை சூறையாடினர்.

Lionel Messi

இதனை அடுத்து ஹைதராபாத் வந்த மெஸ்ஸிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் நிகழ்ச்சியில் எந்த குறையும் இல்லாத வண்ணம் பல்வேறு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. அந்த வகையில் நேற்று ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் மெஸ்ஸி மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் கால்பந்து விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

அதன்பின் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை சந்தித்து மெஸ்ஸி உரையாடல் நடத்தினார். தற்போது இந்த சுற்றுப்பயணத்தில் இரண்டாவது நாளாக மெஸ்ஸி தற்போது மும்பை வந்து இறங்கி இருக்கிறார். மும்பை வான்கடே மைதானத்திற்கு வந்த மெஸ்ஸி, அங்கிருந்த கால்பந்து வீரர்கள், சிறுவர்களுடன் இணைந்து விளையாடினார். அப்போது சுனில் செட்ரியை கட்டி அணைத்தார். பின் கால்பந்துகளை கேலரி நோக்கி உதைத்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து சச்சினை மெஸ்ஸி சந்தித்தார்.

அதன் பின் இரவு 2022 ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையை மெஸ்ஸி வென்ற போது பயன்படுத்திய ஜெர்சி ஏலத்தில் விடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மெஸ்ஸி ரசிகர்கள் சிலருடன் தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்ள இருக்கின்றார். அதற்கு 10 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஏற்பாட்டில் குறைபாடு இருந்ததால் மும்பையில் தற்போது சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கால்பந்து ஜாம்பவானான மெஸ்ஸி நாளை திங்கட்கிழமை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, December 14, 2025, 14:58 [IST]
Other articles published on Dec 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+