Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கெய்ல் சாதனை படைத்திருக்கலாம்.. ஆனால் இந்தியாதான் இன்னும் நம்பர் ஒன்!

சென்னை: உலகக் கோப்பைப் போட்டியில் முதல் முறையாக சதம் போட்டு கெய்ல் சாதனை படைத்துள்ளார். இருப்பினும், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக அளவில் இரட்டை சதம் போட்ட சாதனை இந்தியாவிடமே இன்னும் பத்திரமாக இருக்கிறது.

இதுவரை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமே 5 முறை தான் இரட்டை சதம் எடுக்கப்பட்டுள்ளது. அதில் நான்கு இரட்டை சதங்கள் இந்தியர்களிடம் உள்ளன என்பது முக்கியமானது.

அதிலும் நமது ரோஹித் சர்மா 2 முறை இரட்டை சதம் போட்டு புதிய வரலாறும் படைத்தவர் ஆவார்.

இரட்டை சத சாதனைகள் குறித்த ஒரு பார்வை...

முதல் இரட்டை சதம் - சச்சின்

முதல் இரட்டை சதம் - சச்சின்

கிரிக்கெட் உலகில் பல சாதனைகள் படைத்த சச்சின் டெண்டுல்கர்தான், ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் போட் முதல் வீரர் ஆவார். 2010ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி குவாலியரில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது அவர் 147 பந்துகளில் சரியாக 200 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

2வது சதம் ஷேவாக்

2வது சதம் ஷேவாக்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பதிவான 2வது இரட்டை சதம் இந்தியாவின் வீரேந்திர ஷேவாக்கிடமிருந்து வந்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இந்தூரில் 2011ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி நடநத் போட்டியின்போது 6 சிக்ஸர்கள், 23 பவுண்டரிகளுடன் 140 பந்துகளில் 219 ரன்களை எடுத்தார் ஷேவாக். மேலும் குறைந்த பந்துகளில் இரட்டை சதம் போட்ட சாதனையையும் அப்போது அவர் படைத்தார்.

3வது சதம் ரோஹித் சர்மா

3வது சதம் ரோஹித் சர்மா

3வது இரட்டை சதமும் இந்தியாவுக்கே சொந்தம். 2013ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் ரோஹித் சர்மா 156 பந்துகளில் 209 ரன்கள் குவித்தார். இதில் 15 சிக்ஸர்களை அவர் விளாசினார்.

உலக சாதனை படைத்த ரோஹித் சர்மா

உலக சாதனை படைத்த ரோஹித் சர்மா

4 வது இரட்டை சதமும் ரோஹித்துக்கே சொந்தமாகும். மேலும் இது உலக சாதனையாகவும் மாறியது. 2014ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியின்போது 151 பந்துகளில் 200 ரன்களைத் தொட்ட ரோஹித், தொடர்ந்து அதிரடியாக ஆடி 264 ந்களைக் குவித்து ஓய்ந்தார். மொத்தம் 166 பந்துகளில் இந்த சாதனையைப் படைத்தார் ரோஹித். இது உலக சாதனையாக மாறியது. இதில் 5 சிக்ஸர்களை மட்டும் விளாசிய ரோஹித், 25 பவுண்டரிகளை எடுத்தார்.

5வது இரட்டை சதம் - கெயில்

5வது இரட்டை சதம் - கெயில்

இன்று ஜிம்பாப்வே எதிராக கான்பெரா மைதானத்தில் நடந்த போட்டியில் கெய்ல் 215 ரன்களைக் குவித்து ஒரு நாள் போட்டிகளின் 5வது இரட்டை சதத்தைப் போட்டார். அதேசமயம், குறைந்த பந்துகளில் போடப்பட்ட இரட்டை சதம் என்ற புதிய சாதனையையும், உலகக் கோப்பைப் போட்டிகளில் முதல் இரட்டை சதம் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

2 சாதனை நம்மிடம்தான்

2 சாதனை நம்மிடம்தான்

கெய்ல் இன்று புயல் கிளப்பினாலும் கூட ஒரு நாள் போட்டியில் தனிப்பட்ட வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர், அதிக முறை இரட்டை சதம் போட்ட நாடு என்ற இரு பெருமைகளும் இந்தியாவிடமே இன்னும் உள்ளன என்பது நமக்கு ஆறுதல் தரும் செய்தியாகும்.

Story first published: Tuesday, February 24, 2015, 14:32 [IST]
Other articles published on Feb 24, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+