Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஏலத்தில் சாதனை படைத்த புதிய வீரர்.. யார் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது?

பெங்களூர்: பெங்களூரில் நேற்று காலையில் இருந்து ஐபிஎல் ஏலம் நடைபெற்று வந்தது. இது 11வது ஐபிஎல் சீசனுக்காக நடத்தப்பட்ட ஏலம் ஆகும்.

இந்த ஏலம் தற்போது முடிவுக்கு வந்து இருக்கிறது. இதில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து இருக்கிறது.

யாரும் எதிர்பார்க்காத வீரர் ஒருவர் மிகவும் அதிக விலைக்கு சென்று இருக்கிறார். அதேபோல் வெளிநாட்டு வீரர் ஒருவரும் சாதனை படைத்து இருக்கிறது.

ஆர்டிஎம்

ஆர்டிஎம்

ஆர்டிஎம் மூலம் ஏற்கனவே சில வீரர்கள் எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் ரோஹித் சர்மா, டோணி இருவரும் 15 கோடிக்கு எடுக்கப்பட்டு உள்ளனர். கோஹ்லி அதிகபட்சமாக 17 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ளார்.

அவதாரம்

அவதாரம்

இதில் லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே இருவரும் புதிய சாதனை படைத்து இருக்கிறார்கள். இருவரும் 11 கோடிக்கு எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். மனிஷ் பாண்டே ஹைதராபாத் அணிக்கும், ராகுல் பஞ்சாப் அணிக்கும் எடுக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

இந்த ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ்தான் மிகவும் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர். இவருக்கு மட்டும் 12.5 கோடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவருக்கு குறைந்தபட்ச தொகை 2 கோடி ஆகும். சென்ற வருடம் புனே அணிக்காக 14.5 கோடிக்கு எடுக்கப்பட்டார்.

அதிகம்

அதிகம்

குஜராத்தை சேர்ந்தவர் ஜெயதேவ் உனட்கட். இவர் சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர். ஜெயதேவ் உனட்கட் ராஜஸ்தான் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.11.50 கோடி கொடுத்து ஜெயதேவ் உனட்கட் ஏலம் எடுக்கப்பட்டார். இவர்தான் இந்த ஏலத்தில் அதிகம் விலைக்கு ஏலம் விடப்பட்டவர்.

Story first published: Sunday, January 28, 2018, 18:46 [IST]
Other articles published on Jan 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+