Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சஞ்சு சாம்சன், கரன் சர்மா, ரபாடா... இவங்களுக்கு இவ்வளவு மதிப்பு!

பெங்களூர்: ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. இந்த ஐபிஎல் ஏலத்தில் யாருமே நம்ப முடியாத சம்பவங்கள் நடந்து இருக்கிறது.

முக்கியமான வீரர்கள் பலர் இந்த ஏலத்தில் எடுக்கப்படவில்லை. அதே சமயத்தில் ஒரு போட்டு போட்டி விளையாடிய வீரர்கள் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர்.

முக்கியமாக ரஞ்சி வீரர்கள் அணியில் அதிகம் எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கே பல ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அசத்தல் அம்பதி ராயுடு

அசத்தல் அம்பதி ராயுடு

அம்பதி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 2.2 கோடிக்கு அம்பதி ராயுடு எடுக்கப்பட்டார். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஐபிஎல் போட்டியில் இவர் கலக்கினார். ஐபிஎல் போட்டிக்கு என்றே செய்யப்பட வீரர் இவர். இவரின் வருகை சென்னை அணிக்கு புதிய பலம் ஆகும்.

கருண்

கருண்

ஏலத்தில் கருண் நாயர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 5.60 கோடிக்கு இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவரது குறைந்தபட்ச தொகை 50 லட்சம் மட்டுமே ஆகும். இவருக்கும் கூட பலத்த போட்டி நிலவியது.

கரன்

கரன்

கரன் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 5 கோடிக்கு கார்ன் சர்மா எடுக்கப்பட்டார். இவருடைய குறைந்தபட்ச தொகை 2 கோடி ஆகும். இந்தியாவைஸ் இருந்த வளரும் பவுலர்களில் இவரும் ஒருவர்.

சஞ்சு

சஞ்சு

கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன் மிகவும் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் அணியும் மும்பை அணியும் இவருக்காக சண்டை போட்டுக் கொண்டு இருந்தது. இந்த நிலையில் கடைசியில் ராஜஸ்தான் இவருக்கு 8 கோடி கொடுத்து எடுத்தது.

தென்னாப்பிரிக்க

தென்னாப்பிரிக்க

தென்னாப்பிரிக்க வீரர் ரபாடாவை எடுக்க சென்னை அணி அதிகம் முயன்றது. ஆனால் கடைசியில் டெல்லி அணி அவரை எடுத்தது. ஆர்டிஎம் மூலம் அவரை 4.20 கோடி கொடுத்து எடுத்துள்ளது. அவர்தான் இந்திய அணியை தற்போது தென்னாப்பிரிக்காவில் மிரட்டிக் கொண்டு இருக்கிறார்.

இளம்

இளம்

இந்த ஏலத்தில் இளம் வீரர்கள் அதிகம் எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கே இது வரை அதிக தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் இளம் வீரர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, January 27, 2018, 16:03 [IST]
Other articles published on Jan 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+