மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி பின் ஜாம்பவன்களாக உயர்ந்த வீரர்கள் குறித்த பட்டியலை தான் நாம் பார்க்க போகிறோம். எப்போதுமே தொடக்கத்தை சரியாக செய்ய வேண்டும் என்று அனைவரும் கூறுவார்கள். தொடக்கம் சரியில்லை என்றால் அவ்வளவுதான் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று பலரும் கூறுவார்கள்.
ஆனால் தொடக்கம் சரியாக இல்லை என்றாலும் நம் வாழ்க்கையில் வெற்றி பெற்று பல பாராட்டுகளைப் பெற முடியும். அப்படி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன வீரர்கள் குறித்து தான் நாம் பார்க்க இருக்கிறோம்.

இந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் சச்சின் டெண்டுல்கர். டெண்டல்கர் பாகிஸ்தான் எதிரான தனது முதல் ஒருநாள் போட்டியில் டக் அவுட் ஆனார். அவர் டக் அவுட் ஆனபோது யாரும் இந்த சிறுவன் கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஒரு வீரராக உருவாக்கப் போகிறார் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.
சச்சின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் என்ற சாதனையை படைத்திருக்கிறார். அண்மையில் தான் விராட் கோலி சச்சினின் அதிக சதம் என்ற சாதனையில் ஒரு நாள் கிரிக்கெட்டில் முறியடித்தார். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் மகேந்திர சிங் தோனி. தோனி தன்னுடைய முதல் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக ரன் அவுட் ஆனார்.
ஆனால் தோனி அதன்பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராகவும் கேப்டனாகவும் பினிஷர் ஆகவும் திகழ்ந்தார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் லக்ஷ்மன். லக்ஷ்மன் டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அறியப்பட்டாலும் ,ஒரு நாள் கிரிக்கெட்டிலும் ஒரு அளவுக்கு சிறப்பாக விளையாடி இருக்கிறார். லக்ஷ்மண் தன்னுடைய முதல் ஒருநாள் இன்னிங்சில் டக் அவுட் ஆகி இருக்கிறார்.
இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் ஃபினிஷராக திகழ்ந்த சுரேஷ் ரெய்னா. சுரேஷ் ரெய்னா தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியில் டக் அவுட் ஆனாலும், பின்னர் அவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார். இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான். இவர் அண்மையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் இன்னிங்ஸில் தவான் டக் அவுட் ஆனார்.
ஆனால் ஐசிசி தொடரில் தவானை விட சிறந்த விளையாடிய வீரர் யாரும் கிடையாது என்ற பெயரை அவர் பெற்று இருக்கிறார். இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்திருப்பவர் வசீம் ஜாஃபர். ஜாபர் டெஸ்ட் வீரராக அறியப்பட்டாலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் பெரிய அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் அவர் முதலில் இருக்கிறார் இருப்பினும் ஜாபர் அறியப்பட்டவர். இந்த பட்டியலில் ஏழாம் இடத்தை பிடித்திருப்பவர் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர்.
தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியில் டக் அவுட் ஆனாலும் பின்னர் அதிரடியாக விளையாடி பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். இந்த பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்திருப்பவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷோயுப் மாலிக். மாலிக் தனது முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனாலும்,பின்னர் பாகிஸ்தான் அணியின் மிகச்சிறந்த வீரர்கள் ஒருவராக திகழ்ந்தார்.
இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருப்பவர் தென்னாப்பிரிக்காவின் அதிரடி ஆல்ரவுண்டர் லான்ஸ் குலுஸ்னர். தன்னுடைய முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டானாலும், பின்னர் தென்னாப்பிரிக்காவின் தவிர்க்க முடியாத வீரராக திகழ்ந்து இருக்கிறார்.