For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு முறைக்கு மேல் திருமணம் செய்த பிரபல கிரிக்கெட் வீரர்கள் பற்றி தெரியுமா?

மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் பல ஸ்டார் வீரர்கள் களத்தில் வெற்றி பெற்று ரசிகர்களுக்கு பல மறக்க முடியாத நினைவுகளை கொடுத்திருக்கின்றனர்.நமது மனதுக்கு விருப்பமான வீரர்கள் விளையாடினாலே அது தனி சந்தோஷத்தை கொடுக்கும். இப்படி நமது வாழ்க்கையை சந்தோஷமாக்கிய பல கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது.

இதில் பல கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய மனைவியை கைவிட்டு இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். அப்படி ஒரு முறைக்கு மேல் திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

Wasim akram

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் சுனில் நரேன், உலகம் முழுவதும் நடைபெறும் டி20 தொடரில் விளையாடி மிகவும் பணக்காரனாக மாறிவிட்டார். இந்த சூழலில் கடந்த 2013ஆம் ஆண்டு நந்திதா குமார் என்ற பெண்ணை சுனில் நரைன் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
ஆனால் அவருடன் விவாகரத்து ஏற்பட 2020 ஆம் ஆண்டு ஏஞ்சலா என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார்.

அதேபோன்று இலங்கை அணியின் அதிரடி நட்சத்திர வீரர் ஜெயசூர்யா சுமுது என்ற பெண்ணை கடந்த 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இரண்டு ஆண்டுகள் தான் இந்த ஜோடி வாழ்ந்தது. அதன் பிறகு சந்திரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ்ந்து வருகிறார். இதேபோன்று பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீநாத் 1999 ஆம் ஆண்டு ஜோதிஸ்ணா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அந்த திருமணம் ஒரு ஆண்டு கூட நீடிக்கவில்லை. இதில் அடுத்து மாதவி என்ற பெண்ணை 2000 ஆண்டு திருமணம் செய்தார். இதேபோன்று பிரபல கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி நியோலா என்ற பெண்ணை முதலில் திருமணம் செய்து கொண்டார்.அதன் பிறகு ஆண்ட்ரியா ஹியூமன் என்ற பெண்ணை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

இதேபோன்று பிரபல கிரிக்கெட் வீரர் வசீம் அகரம் உமா முப்தி என்ற பெண்ணுடன் 1985 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர் காலமானதை அடுத்து சனேரியா என்ற ஆஸ்திரேலியா பெண்ணை மணந்து கொண்டார். இதேபோன்று பிரபல கிரிக்கெட் வீரர் தில்ஷான் கடந்த 2005 ஆம் ஆண்டு நிலங்கா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு அந்த பெண்ணை விவகாரத்தை செய்துவிட்டு 2008 ஆம் ஆண்டு மஞ்சுளா என்ற பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். இதேபோன்று தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் நிகிதா என்ற பெண்ணை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் விவாகரத்து ஆனதை எடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல்லை திருமணம் செய்து கொண்டார்.

Story first published: Saturday, July 19, 2025, 22:20 [IST]
Other articles published on Jul 19, 2025
English summary
List of Cricketers Who Married More than once
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+