மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2000ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். 2000 ஆண்டு தென்னாப்பிரிக்கா வீரர் கேரி கிறிஸ்டன் 2179 ரன்கள் அடித்திருந்தார். 2001 ஆம் ஆண்டு இலங்கை வீரர் ஜெயவர்த்தனே 2313 ரன்கள் அடித்திருந்தார்.
2002 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் 2270 ரன்கள் அடித்து இருந்தார். இதுபோன்று 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 2657 ரன்களை அடித்திருந்தார். 2004 ஆண்டு இலங்கை வீரர் சங்கக்காரா 2124 ரன்கள் அடித்திருந்தார்.

2005 ஆம் ஆண்டு மீண்டும் ரிக்கி பாண்டிங் ஒரே ஆண்டில் 2833 ரன்கள் அடித்து சாதனை படைத்திருந்தார். 2006 ஆம் ஆண்டு இலங்கை வீரர் சங்கக்காரா 2609 ரன்களும், 2007 ஆம் ஆண்டு இந்திய வீரர் கங்குலி 2346 ரன்களும் அடித்து இருந்தனர். 2008 ஆம் ஆண்டு சேவாக் 2355 ரன்கள் அடித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு இலங்கை வீரர் தில்ஷான் 2568 ரன்களும், 2010 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா வீரர் ஹசிம் அம்லா 2307 ரன்களும் அடித்திருந்தார்.
2011 ஆம் ஆண்டு சங்கக்கார 2267 ரன்களும், 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் 2251 ரன்களும் அடித்திருந்தனர். 2013 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ் 2181 ரன்களும், 2014 ஆம் ஆண்டு மீண்டும் சங்கக்காரா 2813 ரன்களும் அடித்து இருந்தார். 2015 ஆம் ஆண்டு நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் 2692 ரன்களும் அதன் பிறகு தொடர்ந்து நான்கு ஆண்டுகள் விராட் கோலி அதிக ரன்கள் விளாசி சாதனை படைத்திருக்கிறார்.
2016 ஆம் ஆண்டு விராட் கோலி 2595 ரன்களும், 2017 ஆம் ஆண்டு மீண்டும் விராட் கோலி 2818 ரன்களும், 2018 ஆம் ஆண்டு விராட் கோலி 2735 ரர்களும் 2019 ஆம் ஆண்டு விராட் கோலி 2455 ரன்களும் அடித்திருந்தார். கொரோனா பாதிக்கப்பட்ட 2020 ஆம் ஆண்டு ஆரோன் பிஞ்ச் 944 ரன்கள் அடித்திருந்தார். 2021 ஆம் ஆண்டு ரிஸ்வான் 1915 ரன்களும், 2022 ஆம் ஆண்டு பாபர் அசாம் 2598 ரன்களும், 2023 ஆம் ஆண்டு கில் 2154 ரன்களும் 2024 ஆம் ஆண்டு இலங்கை வீரர் குஷல் மெண்டீஸ் 1860 ரன்களும் அடித்திருக்கின்றனர்.