Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிக டபுள் செஞ்சுரி (ODI) அடித்த வீரர்கள் பட்டியல் - 5 இந்தியர்கள்.. பத்தாவதாக இடம் பெற்ற நிசங்கா

மும்பை : இலங்கை வீரர் பதும் நிசங்கா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து இருக்கிறார். இந்த நிலையில், ஒருநாள் போட்டிகளில் அதிக முறை இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலை பார்க்கலாம்.

இதுவரை பத்து வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்து இருக்கின்றனர். அதில் ஒன்பது வீரர்கள் ஒரு முறை மட்டுமே இரட்டை சதம் அடித்து உள்ளனர். மீதமுள்ள அந்த ஒரு வீரர் மட்டும் மூன்று முறை இரட்டை சதம் அடித்து இருக்கிறார். அது தான் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா.

list-of-most-double-century-in-odi-record-rohit-sharma-on-top-pathum-nissanka-joins-number-10

ரோஹித் சர்மா மட்டும் ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் அடித்து இருக்கிறார். இலங்கை அணிக்கு எதிராக 2014இல் 264 ரன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2013இல் 209 ரன்கள், 2017இல் இலங்கை அணிக்கு எதிராக 208* ரன்கள் என மூன்று முறை இரட்டை சதம் அடித்து இருக்கிறார். இதில் ரோஹித் சர்மா அடித்த 264 ரன்கள் தான் ஒருநாள் போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன்கள் ஆகும்.

ரோஹித் சர்மாவைத் தவிர இரட்டை சதம் அடித்துள்ள ஒன்பது பேட்ஸ்மேன்கள் - சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், சுப்மன் கில், இஷான் கிஷன், மார்டின் கப்தில் (நியூசிலாந்து), கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்), ஃபாக்கர் ஜமான் (பாகிஸ்தான்), கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா), பதும் நிசங்கா (இலங்கை).

இதில் அதிக இரட்டை சதம் அடித்த நாடு இந்தியா தான். மொத்தம் ஐந்து பேட்ஸ்மேன்கள், ஏழு இரட்டை சதம் அடித்து இருக்கின்றனர். மற்ற ஐந்து பேட்ஸ்மேன்களும் ஐந்து வெவ்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள். அவர்கள் தலா ஒரு முறை இரட்டை சதம் அடித்து இருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பதும் நிசங்கா அடித்த இரட்டை சதம் ஒட்டுமொத்தத்தில் ஒருநாள் போட்டிகளில் அடிக்கப்பட்ட 13வது இரட்டை சதம் ஆகும். உலக அளவில் இரட்டை சதம் அடித்த பத்தாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். மேலும், இலங்கை அணிக்காக ஒரே போட்டியில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையையும் செய்தார் பதும் நிசங்கா.

Story first published: Friday, February 9, 2024, 22:30 [IST]
Other articles published on Feb 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+