ரூ. 20+ கோடி.. பல முக்கிய வீரர்களை வெளியிடும் சிஎஸ்கே.. வெளியான அந்த லிஸ்ட்.. இன்னும் 2 நாள்தான்!
சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தக்க வைக்க போகும் வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.
2021 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக சிஎஸ்கே, கொல்கத்தா போன்ற அணிகளில் முக்கியமான பல மாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள். மும்பை, டெல்லி போன்ற சில அணிகள் மட்டும் அதே வீரர்களுடன் ஆட வாய்ப்புள்ளது.

சிஎஸ்கே
இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தக்க வைக்க போகும் வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. சிஎஸ்கே அணி முக்கியமான பல வீரர்களை தக்க வைக்க உள்ளது. பிப்ரவரி 11ம் தேதி ஏலத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வீரர்கள் யார்
இந்த தொடரில் அணிகள் ரீடெயின் செய்ய விரும்பும் வீரர்களின் பட்டியலை வரும் 21ம் தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும். இதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. தற்போது சிஎஸ்கே அணியிடம் 11 லட்சம் மட்டுமே உள்ளது. வீரர்களுக்கான குறைந்தபட்ச தொகையே 20 லட்சம் ரூபாய் ஆகும்.

எடுக்க முடியாது
இந்த தொகையை வைத்து சிஎஸ்கே அணி புதிய வீரர்களை ஏலம் எடுக்க முடியாது. இதனால் சிஎஸ்கே பலரை விடுவிக்க உள்ளது. தோனி, சாம் கரன், ரூத்துராஜ் கெய்க்வாட், டு பிளசிஸ், அம்பதி ராயுடு, ஜடேஜா , தீபக் சாகர், ஷரத்துல் தாக்கூர் ஆகியோரை சிஎஸ்கே தக்க வைக்க வாய்ப்புள்ளது.

விடுவிப்பு
அதன்படி சிஎஸ்கே அணி பியூஸ் சாவ்லா, கரண் சர்மா, கேதார் ஜாதவ் ஆகியோரை வெளியிட வாய்ப்புள்ளது. இதில் பியூஸ் சாவ்லா 6.5 கோடி ரூபாய்க்கு, கரன் சர்மா 5 கோடி ரூபாய்க்கும், ஜாதவ் 7.8 கோடி ரூபாய்க்கும் வெளியிடப்படுவார்கள். இது போக ஹர்பஜனும் வெளியிடப்பட உள்ளார்.

சிறப்பு
இதனால் சிஎஸ்கேவிடம் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தொகை இருக்கும். இந்த 20 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு சிஎஸ்கே அணி புதிய வீரர்களை ஏலம் எடுக்கும். இதற்கான முழு பட்டியல் நாளை மறுநாள் மாலை வெளியாகும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications