Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2021 UAE: எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை மிஸ் பண்ணப் போகின்றன? - முழு லிஸ்ட்

லண்டன்: ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில், எந்தெந்த வீரர்கள் பங்கேற்கவில்லை என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

ஐபிஎல் தொடரில் இதுவரை 29 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்பட உள்ளது.

பயோ பபுள்

பயோ பபுள்

செப்டம்பர் 19-ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல். தொடரில் முதலாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கிய ஐபிஎல் தொடர், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தத் தொடரின் முதல் பாதியில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் மும்பை அணியிடம் சென்னை அணி தோல்வியை தழுவியிருந்தது. இந்நிலையில், தொடரின் 2ம் பாதி தொடங்கவுள்ள நிலையில் இதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் என இரண்டு அணிகளுமே அணியுமே தங்களது வீரர்களை பயோ பபுள் பாதுகாப்புடன் அமீரகம் அனுப்பி உள்ளன. அங்கு கடந்த 13-ம் தேதி முதல் குவாரண்டைனில் இருந்த வீரர்கள் தற்போது கொரோனா பரிசோதனைகளில் நெகட்டிவ் என்ற முடிவை பெற்றுள்ளனர்.

இரண்டு போட்டிகள்

இரண்டு போட்டிகள்

ஐபிஎல் இரண்டாம் கட்ட தொடரின் இறுதிப் போட்டிகள் அக்டோபர் 15ல் நடைபெறும். இரண்டு ஆட்டங்கள் நடைபெறும் நாளில் முதல் போட்டி மாலை பிற்பகல் 3:30 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7:30 மணிக்கும் தொடங்கும். 31 போட்டிகளில் பெரும்பாலானவை துபாயில் (13), ஷார்ஜா (10) மற்றும் அபுதாபி (8) ஆகிய இடங்களில் நடைபெறும். லீக் கட்டத்தின் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையே அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெறும். இத்தொடரில், அக்டோபர் 10 அன்று குவாலிஃபையர் 1 போட்டி துபாயிலும், எலிமினேட்டர் மற்றும் குவாலிபையர் 2 ஷார்ஜாவில் முறையே அக்.11 மற்றும் அக்.13ல் தொடங்கும்.

ஹேசில்வுட் உறுதி

ஹேசில்வுட் உறுதி

இதற்கிடையே, எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் என அனைவருமே கடந்த ஆக.20ம் தேதி முதல் தங்களது முதல்கட்ட பயிற்சியில் ஈடுபட்டனர். துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் இந்த பயிற்சி முகாம் தொடங்கியது நடைபெற்று வருகிறது. அதேபோல், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான முதல் பயிற்சியை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தொடங்கியுள்ளனர். அந்த அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டாம் கட்ட ஐபிஎல் தொடரில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சில வீரர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதுவரை, பேட் கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன், ஜெய் ரிச்சர்ட்சன் மற்றும் ரிலே மெரிடித் ஆகியோர் தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இருப்பினும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இந்த ஆண்டு ஐபிஎல்லில் தனது அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக விளையாடுவதை உறுதி செய்துள்ளார்.

பேரிழப்பு

பேரிழப்பு

அதேசமயம், வெவ்வேறு காரணங்களுக்காக பல வீரர்கள் இரண்டாம் கட்ட ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவர்கள் யார் யார் என்ற முழு விவரத்தை இங்கு பார்க்கலாம்.

பேட் கம்மின்ஸ்

பேட் கம்மின்ஸ்

தனிப்பட்ட காரணங்களால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் அணியில் இருந்து வெளியேறி உள்ளார். 15.50 கோடி கொட்டிக் கொடுத்து எடுக்கப்பட்ட கம்மின்ஸ் இல்லாதது, அந்த அணிக்கு பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை.

ஆடம் ஜம்பா

ஆடம் ஜம்பா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் லெக் ஸ்பின்னர் ஆடம் ஜம்பா ஐபிஎல் 2021 இல் பங்கேற்க மாட்டார், ஏனெனில் அவர் ஆஸ்திரேலியாவின் டி 20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளதால், அதில் கவனம் செலுத்தும் விதமாக தொடரில் இருந்து வெளியேறுகிறாராம்.

கேன் ரிச்சர்ட்சன்

கேன் ரிச்சர்ட்சன்

சக ஆஸ்திரேலிய சக வீரர் கேன் ரிச்சர்ட்சன் ஐபிஎல்லில் ஆர்சிபிக்காக விளையாடுகிறார். டி 20 உலகக் கோப்பை திட்டங்களில் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சனும் இருப்பதால், அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மாட்டார்.

ரிலே மெரிடித்

ரிலே மெரிடித்

இளம் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித் காயம் காரணமாக, ஐபிஎல் 2021-ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜய் ரிச்சர்ட்சன்

ஜய் ரிச்சர்ட்சன்

மற்றொரு ஆஸி வேகப்பந்து வீச்சாளர் ஜய் ரிச்சர்ட்சன், ஐபிஎல் 2021 இன் இரண்டாம் கட்டத்தில் இடம்பெற மாட்டார்.

டேனியல் சாம்ஸ்

டேனியல் சாம்ஸ்

மனநலக் காரணங்களால் ஆஸ்திரேலிய டேனியல் சாம்ஸ் ஐபிஎல் 2021 தொடரில் இருந்து விலகியுள்ளார். இவரும் ஆர்சிபி அணியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபின் ஆலன்

ஃபின் ஆலன்

இந்த சீசனின் தொடக்கத்தில் நியூசிலாந்து அதிரடி வீரர் ஃபின் ஆலன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இணைந்தார். இருப்பினும், நியூஸிலாந்தும் அணிக்கு வரிசையாக போட்டிகள் இருப்பதால், அவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.

ஜோஃப்ரா ஆர்ச்சர்

ஜோஃப்ரா ஆர்ச்சர்

முழங்கை காயம் காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் தொடரில் இருந்து விலகுகிறார். மீதமுள்ள சீசனில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, August 23, 2021, 16:48 [IST]
Other articles published on Aug 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+