பிறந்தநாளில் விராட் கோலி படைத்த சாதனை பட்டியல்.. சச்சினின் 6 ரெக்கார்ட்க்கு கோலியால் ஆபத்து
கொல்கத்தா : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தன்னுடைய 35 வது பிறந்தநாள் அன்று விராட் கோலி பலம் வாய்ந்த தென்னாபிரிக்க அணிக்கு எதிராக அபாரமாக விளையாடி சதம் அடித்ததுடன் பல சாதனைகளையும் படைத்தார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது.

கேப்டன் ரோகித் சர்மா 24 பந்துகளில் 40 ரன்களும், தொடக்க வீரர் கில் 23 ரன்களும் எடுக்க இந்திய அணி 93 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்து விளையாடி வருகிறது. இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்திய அணி 50 வது ஒவரில் 326 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது இந்த இன்னிங்சில் விராட் கோலி தனது 49வது சதத்தை பூர்த்தி செய்து சச்சினின் சாதனையை சமன் செய்தார்.
இந்த நிலையில் இந்த இன்னிங்ஸின் மூலம் விராட் கோலி பல அபாரமான சாதனைகளை படைத்திருக்கிறார். அது என்னவென்று தற்போது பார்க்கலாம். உலககோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். இதன் மூலம் சச்சினுக்கு பிறகு உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைத்திருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 6976 ரன்கள் உடன் முதலிடத்தில் உள்ள நிலையில் விராட் கோலி 6000 ரன்கள் உடன் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இதே போன்று இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஆயிரம் ரன்கள் அடித்திருக்கிறார்.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்து அணிகளுக்கு எதிராக 3000 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 7 அணிகளுக்கு எதிராக மூன்றாயிரம் ரன்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதைப் போன்று ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். சச்சின் 7 அரை சதமும் வங்கதேச வீரர் ஷகிபுல் ஹசன் ஏழரை சதமும் அடித்துள்ள நிலையில் ரோகித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி ஆகியோர் சதம் அடித்து மூன்றாம் இடத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications