For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் தொடரில் கோலி சாதனை..முத்தம் கொடுத்த மனைவி.. பதிலடி தந்த சுப்மன் கில்

பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். வாழ்வா சாவா என்ற கட்டத்தில் பெங்களூர் அணி களம் இறங்கி குஜராத் அணியை எதிர்கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த விராட் கோலி தனி ஆளாக நின்று போராடி 61 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். இதில் 13 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். விராட் கோலியின் ஆட்டத்தால் ஆர் சி பி அணி 197 ரன்கள் எடுத்தது.

List of records created by virat kohli vs GT

விராட் கோலி சதம் அடித்த உடன் அவருடைய மனைவி அனுஷ்கா ஷர்மா அங்கிருந்து பிளையிங் கிஸ் கொடுத்தார். இந்த இன்னிங்ஸ் மூலம் விராட் கோலி பல்வேறு சாதனைகளை முறியடித்தார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஏற்கனவே படைத்திருக்கும் விராட் கோலி, தற்போது ஐபிஎல் தொடரில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு கிறிஸ் கெயில் ஆறு சதம் அடித்த நிலையில், தற்போது விராட் கோலி ஏழு சதம் அடித்திருக்கிறார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் விராட் கோலி பெற்றார்.
ஜெய்ஸ்வால் இந்த ரெக்கார்டை படைத்திருந்த நிலையில் விராட் கோலி தற்போது முறியடித்திருக்கிறார்.

இதேபோன்று ஒரு சீசனில் 600 ரன்கள் மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் கெயில், வார்னர் ஆகியோரின் ரெக்கார்டை விராட் கோலி சமன் செய்துள்ளார்.டேவிட் வார்னர், கெயில் ஆகியோர் மூன்று முறை 600 ஆண்டுகளுக்கு மேல் அடித்துள்ள நிலையில் விராட் கோலி தற்போது 2013, 2016, 2023 ஆம் ஆண்டு 600 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் கே எல் ராகுல் 4 முறை 600 ரன்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார்.

இதேபோன்று டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து இரண்டு சதங்களை அடித்த நான்காவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைத்திருக்கிறார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை இது மூன்றாவது முறையாகும். இதே போன்று சுப்மன் கில்லும் விராட் கோலிக்கு ஈடு கொடுத்து விளையாடி வருகிறார்.

ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் 25 முறை 50 ரன்களுக்கு மேல் டி 20 கிரிக்கெட்டில் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை கில் படைத்திருக்கிறார். இதேபோன்று நடப்பு சீசனில் 600 ரன்கள் கில் எட்டி உள்ளார். டி20 கிரிக்கெட்டில் சதம் அடிப்பதை கஷ்டமாக பார்க்கப்படும் இந்த காலகட்டத்தில் ,கடந்த பத்து நாட்களில் ஏழு முறை சதம் அடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, May 21, 2023, 23:56 [IST]
Other articles published on May 21, 2023
English summary
List of records created by virat kohli vs GT ஐபிஎல் தொடரில் கோலி சாதனை..முத்தம் கொடுத்த மனைவி.. பதிலடி தந்த சுப்மன் கில்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+