கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி பல சாதனைகளை படைத்திருக்கிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் பௌண்டரி எல்லை கோடுகள் சிறியது என்பதால் பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர்.
இதில் ருத்ராஜ் கெய்க்வாட் 35 ரன்களும், கான்வே 56 ரன்களும் அடித்தனர். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ரஹானே மற்றும் சிவம் துபே ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரஹானே 29 பந்துகளில் 71 ரன்களும், சிவம் துபே 21 பந்துகளில் 50 ரன்கள் அடித்தனர். இதில் இருவருமே தலா ஐந்து சிக்ஸர்களை விளாசினர்.

இதன் மூலம் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 235 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை எடுத்தது. இதன் மூலம் சிஎஸ்கே அணி இன்று பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறது. நடப்பு சீசனில் ஒரு அணி அதிக ஸ்கோர் அடித்திருப்பது இந்த போட்டியில் தான். இது ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அடித்துள்ள மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
அதேபோன்று ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 200 ரன்களுக்கு மேல் அடித்த அணி என்ற பெருமையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்று இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே 26 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறது. இதேபோன்று ஈடன் கார்டன் மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ipl ஸ்கோர் என்றால் இதுதான்.
இதைப் போன்று நடப்பு சீசனில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதும் இந்த போட்டியில் தான். இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர்கள் மொத்தமாக 18 சிக்சர்கள் விளாசி இருக்கிறார்கள். இதேபோன்று இரண்டு பேட்ஸ்மேன்கள் 25 பந்துகளுக்கு கீழ் அரை சதம் அடித்திருப்பதும் இதுதான் முதல்முறை.