Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்ச்சையை கிளப்பிய தனுஷ்கா குணதிலகாவின் ரன் அவுட்.இதற்கு முன்னர் இதே போல் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள்

ஆண்டிகுவா: இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகாவின் விக்கெட் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சுவாரஸ்ய நிகழ்வாக Obstructing the Field என்ற முறையில் அவுட் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இதே போன்ற வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்ட விக்கெட்களை பார்க்கலாம்.

இலங்கை

இலங்கை

முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா 55 ரன்கள் எடுத்து ஃபார்மில் இருந்தார். ஆனால் 22ம் ஓவரின் போது பொல்லார்டு வீசிய பந்து குணதிலகாவின் கையில் பட்டு அவர் அருகிலேயே விழுந்தது. பின்னர் குணதிலகா சிங்கிள் எடுக்க முற்பட்டார். ஆனால் பொல்லார்டு பந்தை எடுத்து ரன் அவுட்டாக்க முயற்சித்த போது சுதாரித்துக்கொண்ட குணதிலகா ரன் எடுக்காமல் பின் வாங்கினார். அப்போது பந்தையும் அவர் காலில் தட்டிவிட்டு பின் சென்றதால் அவுட்டாக்க முடியாமல் போனது. இதனால் Obstructing The Field முறைப்படி அவுட் கொடுக்கப்பட்டது.

 முதல் அவுட்

முதல் அவுட்

கடந்த 1987ம் ஆண்டு பாகிஸ்தான் வீரர் ரமீஷ் ராஜா ஒரு நாள் போட்டிகளில் முதல் முறையாக Obstructing the field முறையில் அவுட்டானார். கராச்சியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் 98 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது பந்தை அடித்துவிட்டு சிங்கிள் எடுத்தார். பின்னர் 2வது ரன் ஓடி சதம் எடுக்க முயற்சித்த போது இங்கிலாந்து வீரர்கள் ரன் அவுட் ஆக்க முயன்றனர். ஆனால் அவர் பந்து ஸ்டம்பை தொட விடாமல் பேட்டை வைத்து தடுத்ததால் அவுட் கொடுக்கப்பட்டார்.

 மொஹிந்தர் அமர்நாத்:

மொஹிந்தர் அமர்நாத்:

1989ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மொஹிந்தர் என்ற இந்திய வீரர் இந்த முறையில் அவுட்டானார். மொஹிந்தர் 80 ரன்கள் எடுத்திருந்த போது இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரவி ரத்னாயகா வீசிய பந்தை அவர் ஸ்டம்பில் பட விடாமல் பேட்டை வைத்து தடுத்தார். இதனால் அவருக்கு அவுட் வழங்கப்பட்டது. இந்த முறையில் இதுவரை அவுட்டாகியுள்ள ஒரே இந்தியர் இவரே ஆகும்.

இன்சமாம்

இன்சமாம்

கடந்த 2006ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் ஒரு நாள் போட்டியில் இது நடைபெற்றது. இந்திய வீரர் வீசிய பந்தை பாகிஸ்தான் வீரர் இன்சமாம் உல்ஹக் அடித்துவிட்டு கிறிஸை விட்டு வெளியேறினார். பின்னர் சுரேஷ் ரெய்னா அவரை ரன் அவுட் ஆக்க முயன்றபோது மீண்டும் பேட்டை அவர் பந்தை வைத்து தடுத்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த இந்திய வீரர்கள், நடுவர்களிடம் முறையிட்டு அவருக்கு அவுட் பெற்றுக்கொடுத்தனர்.

 ஹவீஸ்

ஹவீஸ்

2013ம் ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது ஹவீஸ் பந்தை அடித்துவிட்டு 2வது ரன் எடுக்க ஓடினார். அப்போது ரன் அவுட்டாக்க எதிரணி வீரர் வீசிய பந்து ஹவீஸ் மீது பட்டு அவர் ஸ்டம்பில் படாமல் போனது. இதனால் அவர் பிட்ச் லைனுக்குள் ஓடியதாக முறையிட்டு தென்னாப்பிரிக்க வீரர் அவரை அவுட்டாக்கினர்.

அன்வர்

அன்வர்

கடந்த 2013ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அன்வர் அலி இந்த முறையில் அவுட்டாக்கப்பட்டார். தென்னாப்பிரிக்க வீரர் வீசிய பந்தை அடித்துவிட்டு ரன் ஓட முயன்றார். அப்போது ரன் அவுட்டாக்க ஸ்டம்பை நோக்கி வீசப்பட்ட பந்து கிறீஸுக்கு உள்ளே ஓடிய அன்வர் அலி மீது பட்டு வேறு பக்கம் சென்றது. இதனால் அவருக்கு இந்த முறைப்படி அவுட் கொடுக்கப்பட்டது.

ஸ்டோக்ஸ்

ஸ்டோக்ஸ்

கடந்த 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்த முறையில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அவுட் கொடுக்கப்பட்டார். ஸ்டோக்ஸ் அடித்த பந்தை மறுமுனையில் இருந்த மிட்சல் ஸ்டார்க் தடுத்து உடனடியாக ஸ்டம்பை நோக்கி வீசினார். அப்போது பென் ஸ்டோக்ஸ் அந்த பந்தை கையால் தடுத்தார். இதற்காக பென் ஸ்டோக்ஸுக்கு அவுட் கொடுக்கப்பட்டது.

Story first published: Friday, March 12, 2021, 17:58 [IST]
Other articles published on Mar 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+