
முரளி
இதில் முரளி விஜய் யாராலும் எடுக்கப்படவில்லை. சென்னை அணியும் இவரை எடுக்க வில்லை. இவருக்கு குறைந்தபட்ச தொகையே 2 கோடிதான். இதனால் கடைசியில் இவரது தொகை 1 கோடியாக குறையும். அப்போது அவர் எடுக்கப்படலாம். இவர் டெஸ்ட் வீரர் போல விளையாடுவதால் இப்படி புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

அஸ்வின் பஞ்சாப்
சென்னை அணியின் சொத்தாக இருந்த அஸ்வின் சென்னை அணியால் எடுக்கப்படவில்லை. இவரை பஞ்சாப் அணி எடுத்து இருக்கிறது. இவருக்கு நிறைய பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் மொத்தம் 7.60 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். சென்னை அணி இவரை வாங்க தவறிவிட்டது.

தினேஷ்
சென்னை அணியில் ஏற்கனவே கீப்பராக டோணி இருப்பதால் தினேஷ் கார்த்திக் எடுக்கப்படமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தினேஷ் கார்த்திக்கை எப்படியாவது எடுக்க சென்னை முயன்றது. கடைசியில் கொல்கத்தா அணி அவரை 7.40 கோடிக்கு வாங்கியது.

இன்னும் சிலர்
இன்னும் சில தமிழ்நாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். வாஷிங்க்டன் சுந்தர், முருகன் அஸ்வின், விஜய் சங்கர் ஆகியோர் இன்னும் ஏலத்திற்கு வரவில்லை. இவர்கள் இளம் வீரர்கள் என்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











