Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெற்றி வேண்டுமென்றால் இதை செய்யனும்.. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு உள்ள சிக்கல் - விவரம்

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் கைக்கொடுக்க வேண்டியுள்ளது.

Recommended Video

IND vs ENG 1st ODI இந்திய அணி அபார வெற்றி *Cricket

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்குகிறது.

இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு இந்த முதல் போட்டி தொடங்குகிறது.

முதல் போட்டி

முதல் போட்டி

பும்ராவின் தலைமையில் டெஸ்ட் போட்டியில் சொதப்பிய இந்திய அணி, ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியவுடன் டி20 தொடரில் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றுவதற்கு தீவிர முனைப்புடன் உள்ளது. ஆனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்றால் டாஸ் வென்றே தீர வேண்டும்.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

இரு அணிகளும் மோதும் லண்டன் ஓவல் மைதானத்தில் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய அளவில் உதவிகள் கிடைக்கும். ஆனால் 2வது பேட்டிங் செய்ய வேண்டும். ஆட்டத்தின் முதல் சில நேரங்களுக்கு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தான் ஸ்விங் கிடைக்கும். ஸ்பின்னர்கள் தான் நிறைய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதால் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தலாம். 2வது பாதியில் பவுலர்களுக்கு ஸ்விங் மற்றும் டேர்னிங் கிடைக்காமல் சிரமப்படுவார்கள்.

சராசரி ஸ்கோர்

சராசரி ஸ்கோர்

இந்த மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற 5 ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 300 ரன்கள் வரை அடிக்கப்பட்டு வருகிறது. 2வதாக பவுலிங் வீசினால் பணிப்பொழிவில் பந்து கையை விட்டு நழுவும். எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கை தான் தேர்வு செய்ய வேண்டும்.

 ரோகித்திற்கான சாதனை

ரோகித்திற்கான சாதனை

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இன்று நல்ல பேட்டிங்கை செய்ய வாய்ப்புள்ளது. அவர் ஏற்கனவே இங்கிலாந்து களத்தில் 7 சதங்கள் அடித்துள்ளார். இன்றைய போட்டியில் மட்டும் அவர் சதமடித்துவிட்டால் அயல்நாட்டு களத்தில் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் படைப்பார்.

Story first published: Tuesday, July 12, 2022, 15:46 [IST]
Other articles published on Jul 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+