Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லவ் யூ ரோ... தன்னுடைய சிறந்த நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரித்திகா சச்தே...

மும்பை : ரோகித் சர்மா தன்னுடைய 33வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில் அவரது மனைவி ரித்திகா சச்தே இன்ஸ்டாகிராம் மூலம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

Recommended Video

Rohit Sharma Birthday special | Story of Rohit Sharma in Tamil

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3 அரைசதங்களை பூர்த்தி செய்துள்ள ரோகித் சர்மா, இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

Love You Ro: Ritika Sajdeh Posts Heart-Warming Birthday Wish to Rohit Sharma

அவருக்கு முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

இந்திய அணயின் முக்கிய வீரராக திகழ்ந்து வருபவர் ரோகித் சர்மா. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3 அரைசதங்களை பூர்த்தி செய்து சாதனை புரிந்துள்ள அவர், ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தலைமையேற்று 4 முறை கோப்பையை வென்றவர். கடந்த 2019 உலக கோப்பை தொடரில் 5 சதங்களை அடித்து, அந்த தொடரின் அதிக ரன்களை குவித்தவர் என்ற பெருமையை பெற்றவர்.

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தன்னுடைய 33வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில், அவர் தனது வீட்டிலேயே தனது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடி வருகிறார். அவருக்கு சக வீரர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது மனைவி ரித்திகா சச்தே இன்ஸ்டாகிராமில் ரோகித் சர்மாவிற்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இருவரும் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், தனக்கு மூச்சுமுட்டும் அளவிற்கு தன்னை சிரிக்க செய்பவர் ரோகித் சர்மா என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய பயணங்களின் உற்ற தோழனாய், நண்பனாய், சிறந்த தந்தையாய், விளங்குபவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் லவ் யூ ரோ என்றும் அவர் கூறியுள்ளார்.

Love You Ro: Ritika Sajdeh Posts Heart-Warming Birthday Wish to Rohit Sharma

அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டவுடன் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை அதிகளவில் பகிர்ந்தனர்.

Story first published: Thursday, April 30, 2020, 17:37 [IST]
Other articles published on Apr 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+