For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உங்க கன்னம் ரொம்ப பிடிச்சு போய்டுச்சு... ரோகித்தை வம்பிழுத்த யுவராஜ் சிங்

மும்பை : தனது மனைவியுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா.

Recommended Video

Afridi says Indian players ask for forgiveness

உங்களுக்கு பிடிச்சதை எப்பவுமே கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள் என்று அந்த புகைப்படத்திற்கு கேப்ஷன் வெளியிட்டுள்ளார் ரோகித்.

இதனிடையே, இந்த புகைப்படத்தில் கமெண்ட் செய்துள்ள யுவராஜ் சிங், ரோகித்தின் கன்னம் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும், அதை கெட்டியாக பிடித்துக் கொள்ளலாமா என்றும் வம்பிழுத்துள்ளார்.

மீண்டும் பயிற்சி

மீண்டும் பயிற்சி

இந்திய துவக்க ஆட்டக்காரரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமாக சிறப்பாக செயல்பட்டு வருபவர் ரோகித் சர்மா. இவர் இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களாக வீட்டில் முடங்கியிருந்த நிலையில், கடந்த வாரத்தில் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு, மிகுந்த உற்சாகமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் பதிவு

இன்ஸ்டாகிராமில் பதிவு

இந்நிலையில், தன்னுடைய மனைவி ரித்திகா சச்தேவுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரோகித் சர்மா. மேலும் உங்களுக்கு பிடித்த விஷயத்தை மிகவும் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள் என்றும் அந்த புகைப்படத்திற்கு கேப்ஷன் வெளியிட்டுள்ளார் ரோகித் சர்மா.

வம்பிழுத்த யுவராஜ் சிங்

வம்பிழுத்த யுவராஜ் சிங்

இந்த புகைப்படத்திற்கு வழக்கம்போல ஏராளமான ரசிகர்கள் கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் அள்ளி தெளித்துள்ளனர். இந்நிலையில், இந்த புகைப்படத்திற்கு முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கும் கமெண்ட் அளித்துள்ளார். ரோகித்தின் கன்னம் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் அதை தான் பிடித்துக் கொள்ளலாமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யுவராஜை கலாய்த்த ரோகித்

யுவராஜை கலாய்த்த ரோகித்

யுவராஜ் மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொள்வதில் காலநேரம் பார்ப்பதில்லை. சமீபத்தில் ரோகித்தின் 33வது பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறிய யுவராஜ் சிங்கின் தலைமுடி, இந்த லாக்டவுன் காலத்தில் மிகவும் மோசமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக ரோகித் சர்மா கலாய்த்திருந்தார்.

Story first published: Sunday, July 5, 2020, 21:47 [IST]
Other articles published on Jul 5, 2020
English summary
Love your Cheeks - Yuvraj Singh teases Rohit Sharma
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+