Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என் உயிரை கொடுத்து விளையாடுகிறேன்.. விமர்சனங்களுக்கு கேஎல் ராகுல் பதிலடி..தோல்விக்கு காரணம் என்ன?

லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் பஞ்சாப் அணி கேப்டன் கே எல் ராகுல் அதிக ரன்களை அடித்தாலும் குறைந்த ஸ்ட்ரைக் ரெட்டில் விளையாடுகிறார் என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இந்த நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள கேல் ராகுல் நாங்கள் இன்றைய ஆட்டத்தில் ஒரு 10 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம். நாங்கள் பந்து வீசும் போது பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு கொஞ்சம் சாதகமான சூழல் ஏற்பட்டது.

LSG captain KL Rahul says he gave everthing in the field for the team

இருப்பினும் எங்களுடைய திட்டத்தை பந்துவீச்சில் நாங்கள் சரியாக கையாளவில்லை. நாங்கள் புது மைதானத்தில் புது ஆடுகளத்தில் விளையாடுகிறோம். இதனால் கடைசியாக விளையாடிய ஆட்டத்தை வைத்து எந்த முடிவையும் எடுக்க முடியாது. நாங்கள் களத்திற்கு வந்த பிறகு சூழலுக்கு தகுந்த மாதிரி தான் இலக்கை நிர்ணயிக்கிறோம்.

எங்கள் அணியில் இரண்டு பேட்டர்கள் நன்றாக விளையாடினால் நாங்கள் 190 ரன்கள் கூட எடுக்க முடியும் .ஆனால் இன்றைய போட்டியில் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் அடித்த சாட் எல்லாம் கேட்ச் ஆக மாறிவிட்டது. 10, 15 ரன்கள் எடுத்தால் நிச்சயமாக நாங்கள் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றிருப்போம்.

எங்களுடைய அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு பணி கொடுத்திருக்கிறோம். அதனால் தான் இதனை டீம் கேம் என்று நாங்கள் அழைக்கின்றோம். நான் ஒவ்வொரு போட்டியிலும் என் உயிரைக் கொடுத்து விளையாடுகிறேன். வீரராகவும் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட வேண்டும் என கடுமையாக உழைக்கிறேன். தொடர்ந்து அவ்வாறுதான் செயல்படுவேன்.

அடுத்த போட்டியில் வெற்றி பெற அணிக்கு தேவையான ஊக்கத்தை நான் அளிப்பேன் என்று கே எல் ராகுல் கூறினார். ஐபிஎல் சீசனில் 5 போட்டியில் விளையாடிய லக்னோ அணி மூன்று வெற்றி இரண்டு தோல்வியை தழுவி ஆறு புள்ளிகள் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 4வது இடத்திற்கு புள்ளி பட்டியலில் முன்னேறி இருக்கிறது.

Story first published: Saturday, April 15, 2023, 23:54 [IST]
Other articles published on Apr 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+