Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேஎல் ராகுல் தான் சிறந்த கேப்டன்.. ஹர்திக் பற்றி எல்லாம் தெரியாது.. முன்னாள் பயிற்சியாளர் கருத்து

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக கேஎல் ராகுல் வரவேண்டும் என்று தான் விரும்புவதாக லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆன்டி பிளவர் தெரிவித்துள்ளார்.

கே எல் ராகுல் இந்திய அணிக்காக இதுவரை 7 ஒரு நாள் போட்டி மூன்று டெஸ்ட் மற்றும் ஒரு டி20 போட்டியில் செயல்பட்டு இருக்கிறார்.

கே எல் ராகுல் தான் அடுத்த கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பின் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா குஜராத் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு ஐபிஎல் பட்டத்தை வென்றதன் மூலம் அனைத்தையும் மாற்றிவிட்டார் .

சிறந்த கேப்டன்

சிறந்த கேப்டன்

இந்த நிலையில் லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்டி பிளவர் அளித்துள்ள பேட்டியில் கே எல் ராகுல் சிறந்த கேப்டன். அவர் மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் .தொடர்ந்து பேசிய அவர் கே எல் ராகுலுக்கு பேட்டிங்கில் இல்லாத திறமையே கிடையாது. அவர் அணியை சிறப்பாக தலைமை தாங்க கூடியவர். அவர் பேட்டிங் விளையாடும்போது பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்.

நல்ல தலைவன்

நல்ல தலைவன்

நான் கே எல் ராகுலை இன்று அல்ல நான் இங்கிலாந்து ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது கே எல் ராகுல் இந்திய ஏ அணிக்காக திருவனந்தபுரத்தில் விளையாடினார்.நான் அப்போதியில் இருந்து கே எல் ராகுலை பார்த்து வருகிறேன். ராகுல் ஒரு இளம் வீரர் ஒரு நல்ல தலைவன். எந்த சூழ்நிலையிலும் அமைதியாக இருப்பார். அவர் கூட இருந்தால் நமக்கு நல்ல துணையாக இருக்கும். அவரை நான் வெகுவாக மதிக்கின்றேன். அவருடன் பணியாற்றுவதை நான் விரும்புகிறேன் என்று ஆன்டிபிளவர் கூறியுள்ளார்.

எனக்கு தெரியாது

எனக்கு தெரியாது

இதை தொடர்ந்து ஹர்திக் பாண்டியா ,சூரியகுமார் யாதவ் , ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அடுத்த கேப்டனாக வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஆண்டி பிளவர், ராகுலை மட்டும்தான் எனக்கு தெரியும். ராகுல்தான் சிறந்த கேப்டனாக இருப்பார் மற்றும் மூன்று வீரர்கள் குறித்தும் எனக்கு தெரியாது. இதனால் அவர்கள் குறித்து நான் எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. தேர்வு குழுவினர் என்ன நினைக்கிறார்கள் என்பது பொருத்து தான் அது அமையும்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

ராகுலுக்கு என்னுடைய திருமண நல்வாழ்த்துக்கள். பல்வேறு அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக இருப்பது மிகவும் சவாலான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ள ஆண்ட்டிப்ளவர் இந்த அனுபவம் நிச்சயம் பயிற்சியாளராக எனக்கு தேவை என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது ஆண்டி பிளவர் சர்வதேச லீக் t20 தொடரில் அதானி வாங்கியுள்ள Gulf giants அணிக்கு பயிற்சியாளராக செயல்படுகிறார்.

Story first published: Saturday, January 14, 2023, 23:17 [IST]
Other articles published on Jan 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+