Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி கீழே விளையாடறத லக்கியா பீல் பண்றேன்... எமோஷனலனா பீலிங்கா இருக்கு... புஜாரா நெகிழ்ச்சி!

மும்பை : ஐபிஎல் போட்டிகளின் துவக்கத்திற்காக 8 ஐபிஎல் அணிகளும் காத்துள்ளன. சிறப்பான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார் சத்தீஸ்வர் புஜாரா. அவரை 50 லட்சம் ரூபாய்க்கு சிஎஸ்கே ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்நிலையில், தோனியின்கீழ் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை அதிர்ஷ்டமாக கருதுவதாக புஜாரா தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கேவில் புஜாரா

சிஎஸ்கேவில் புஜாரா

ஐபிஎல் 2021 சீசனில் சிறப்பாக களமிறங்க அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார் சத்தீஸ்வர் புஜாரா. கடந்த 2014க்கு பிறகு தற்போது இந்த சீசனில்தான் அவர் ஐபிஎல்லில் களமிறங்கியுள்ளார். அதன் பயிற்சி முகாமில் சிறப்பான வகையில் பங்கேற்றுள்ளார்.

அதிர்ஷ்டம் என புஜாரா மகிழ்ச்சி

அதிர்ஷ்டம் என புஜாரா மகிழ்ச்சி

இந்நிலையில் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியின்கீழ் களறமிறங்கி விளையாடவுள்ளதை அதிர்ஷ்டமாக பார்ப்பதாக புஜாரா தெரிவித்துள்ளார். தன்னுடைய சர்வதேச அறிமுக போட்டியின் முதல் கேப்டனாக எம்எஸ் தோனி இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 2010ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் அவர் தனது அறிமுக போட்டியில் விளையாடினார்.

ஏலத்தில் எடுத்ததற்கான விளக்கம்

ஏலத்தில் எடுத்ததற்கான விளக்கம்

சிஎஸ்கேவில் புஜாரா இணைந்தது குறித்து பாராட்டு தெரிவித்த அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், இந்திய அணியின் ஹீரோவாக உள்ள புஜாரா ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாமல் இருப்பதை தான் விரும்பவில்லை என்றும் அதனால்தான் சிஎஸ்கேவிற்காக அவரை ஏலத்தில் எடுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

எமோஷனலாக பீல் செய்த புஜாரா

எமோஷனலாக பீல் செய்த புஜாரா

இந்நிலையில் ஸ்ரீனிவாசனின் இந்த கருத்து, தன்னை எமோஷனலாக பீல் செய்ய வைத்துள்ளதாக புஜாரா தெரிவித்துள்ளார். மேலும் சிஎஸ்கே போன்ற சிறப்பான அணியில் தான் இடம்பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், தேசிய அணியின் வீரர்கள் திறமைக்கு அவர்கள் மதிப்பளிப்பதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, March 31, 2021, 11:39 [IST]
Other articles published on Mar 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+