Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்கடி லுங்கி?... ஒரே நாளில் சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளையான லுங்கிசனி கிடி!

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் வீரர்களை தமிழக மக்கள் கொண்டாடுவது வழக்கம். தல, சின்ன தல என பெயர் வைத்து உச்சி முகர்ந்து, பிட்ச் முகர்ந்து வாழ்த்துவார்கள்.

அந்த வகையில் சென்னை அணியில் புதிய கொண்டாட்டமாக லுங்கிசனிகிடி உருவாகி இருக்கிறார். ஒரே நாளில் இவர் வைரல் ஆகியுள்ளார்.

முக்கியமாக இவருக்காக உருவாக்கப்பட்டு இருக்கும் பேக் ஐடி ஒன்று சிரிக்க வைத்து கண்களின் செம்பரம்பாக்கத்தை நிரம்ப வைக்கிறது.

லுங்கிசனி

லுங்கிசனி கிடி சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 50 லட்சம் கொடுத்து லுங்கிசனி கிடி ஏலம் எடுக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இவருக்கு 21 வயது தான் ஆகிறது. இவர் மிகவும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.

சென்னைக்கு

இவர் சென்னை அணிக்கு வருவது குறித்து ஏற்கனவே அரசல் புரசலான தகவல்கள் இருந்தது. இதற்காக அவருடைய பேக் ஐடி ஒன்று சென்னையில் உருவாக்கப்பட்டது. அதில் ''நான் ஸ்ரீனிவாசன் உடன் #எங்கடிலுங்கி குறித்து விவாதித்துக் கொண்டு இருந்தேன். எல்லாமே நன்றாக நடக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம். உங்களுக்கு நான் சொல்வது புரியும் என்று நினைக்கிறேன்'' என்று முன்பே க்ளூ கொடுத்துள்ளார்.

எங்கடி லுங்கி டிவிட்

அதேபோல் எங்கடி லுங்கி டேக்கும் வைரல் ஆனது. அதில் எங்கடி லுங்கி என்று ஒரு கணவன் கேட்பது போல படம் வரைந்து, நான் இங்கதான் இருக்கேன் என்று லுங்கிசனி சொல்வது போல காமெடி செய்துள்ளனர்.

நான்தான் சனி

இந்த பேக் ஐடி எழுதியதில் பெஸ்ட் டிவிட் இதுதான். அதில் ''சென்னை ரசிகர்களே என் பெயர் லுங்கிசனி. நான் எதிர் அணிகளுக்கு சனியாக இருப்பேன். அனைவரையும் அவுட் செய்து லுங்கி டான்ஸ் ஆடுவேன்'' என்றுள்ளார்.

மகிழ்ச்சி

தற்போது இதுகுறித்து ஒரிஜினல் லுங்கி தனது டிவிட்டில் எழுதி இருக்கிறார். ''என்ன நடக்க போகிறது என்று நினைத்தால் த்ரில்லாக இருக்கிறது. எல்லா புகழும் இறைவனுக்கே'' என்றுள்ளார்.

பாடல்

மேலும் அவர் லுங்கி டான்ஸ் பாடல் குறித்து பேசியுள்ளார். அதில் ''லுங்கி டான்ஸ் பாடல் கேட்டேன். இப்போதே அந்த பாடல் பிடித்துவிட்டது'' என்றுள்ளார்.

Story first published: Monday, January 29, 2018, 12:06 [IST]
Other articles published on Jan 29, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+