மும்பை : சிஎஸ்கேவிற்காக இந்த சீசனில் ஆடவுள்ள தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி நிகிடி வரும் ஏப்ரல் 5ம் தேதிக்கு மேல் இந்தியா வரவுள்ளதாக சிஎஸ்கே சிஇஓ தெரிவித்துள்ளார்.
இதுவரை 11 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் லுங்கி நிகிடி.

இதனிடையே, ஏப்ரல் 5க்கு மேல் நிகிடி இந்தியா வரவுள்ளதாகவும் முதல் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்றும் சிஎஸ்கே சிஇஓ தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் வரும் 9ம் தேதி துவங்கவுள்ளது. சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையிலான முதல் போட்டி ஏப்ரல் 10ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது. தற்போது மும்பையில் சிஎஸ்கே அணி வீரர்கள் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த அணியில் ஏறக்குறைய அனைத்து வீரர்களும் இணைந்துள்ளனர்.
இதனிடையே, அணியின் தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி நிகிடி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் வரும் 5ம் தேதிக்கு மேல் இந்தியா வரவுள்ளதாக சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் 7 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட உள்ளதாகவும் முதல் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
இதுவரை 11 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள நிகிடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.