இது சிஎஸ்கேவுக்கு சனி பெயர்ச்சி.. இனிமே சென்னை லுங்கி டெல்லி பேண்டுக்கு பவுலிங் போடுவார்!
பெங்களூர்: ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. சென்னை அணி இப்போதுதான் ஏலம் எடுக்க தொடங்கி இருக்கிறது என்று கூட சொல்லலாம்.
புதிதாக 30 நிமிடத்தில் 5 வீரர்களை எடுத்துள்ளது. இதில் சென்னைக்கு புதிதாக மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் எடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அதில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த லுங்கிசனி கிடி என்ற வீரரும் எடுக்கப்பட்டு இருக்கிறார். தற்போது இவர் ஏலம் வைரல் ஆகி இருக்கிறது. இதனால் சென்னை அணிக்கு சனி பெயர்ச்சி ஏற்பட்டு இருப்பதாக சந்தோசப்படுகிறார்கள்.
லுங்கிசனி
லுங்கிசனி கிடி சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 50 லட்சம் கொடுத்து லுங்கிசனி கிடி ஏலம் எடுக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இவருக்கு 21 வயது தான் ஆகிறது. இவர் மிகவும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.
செம்ம
சென்னை அணியில் இருக்கும் ஹர்பஜன், லுங்கி, இம்ரான் தாஹிர் ஆகியோரை வைத்து இவர் காமெடி செய்துள்ளார். அதில் ''இனி சென்னை அணி வீரர்கள் லுங்கி கட்டிக்கொண்டு, இம்ரான் தயிரை ஊற்றி, பஜ்ஜி (ஹர்பஜன்) சாப்பிட முடியும்'' என்றுள்ளார்.
லுங்கி
இவர் ''முதல்முறையாக லுங்கி டான்ஸ் இப்போதுதான் சென்னை அணிக்கு செட் ஆகி இருக்கிறது'' என்றுள்ளார்.
டெல்லி பேண்ட்
டெல்லி அணியில் ரிஷாப் பேண்ட் என்ற வீரர் இருக்கிறார். இவர் ''சென்னை லுங்கியா இல்லை டெல்லி பேண்டா என்று பார்த்துடுவோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மகிழ்ச்சி
தற்போது இதுகுறித்து லுங்கி தனது டிவிட்டில் எழுதி இருக்கிறார். ''என்ன நடக்க போகிறது என்று நினைத்தால் த்ரில்லாக இருக்கிறது. எல்லா புகழும் இறைவனுக்கே'' என்றுள்ளார்.
பாடல்
மேலும் அவர் லுங்கி டான்ஸ் பாடல் குறித்து பேசியுள்ளார். அதில் ''லுங்கி டான்ஸ் பாடல் கேட்டேன். இப்போதே அந்த பாடல் பிடித்துவிட்டது'' என்றுள்ளார்.


Click it and Unblock the Notifications