For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காரைக்குடியை வெளியேற்றியது.. பைனல் நுழையுமா கோவை!

டிஎன்பிஎல் மூன்றாவது சீசனில் நடந்த எலிமினேட்டர் சுற்றில் காரைக்குடியை வீழ்த்தியது கோவை. இரண்டாவது குவாலிபையரில் மதுரையை சந்திக்கிறது கோவை.

திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி-20 கிரி்ககெட் தொடரின் மூன்றாவது சீசனின் பைனலுக்கு நுழையக் கூடிய இரண்டாவது குவாலிபையர் சுற்று ஆட்டத்துக்கு கோவை முன்னேறியது. நேற்று நடந்த எலிமினேட்டரில் தோல்வியடைந்து காரைக்குடி வெளியேறியது.

தமிழ்நாடு பிரிமியர் லீக் முகப்பு | அட்டவணை/முடிவுகள்

டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. நேற்று நடந்த முதல் குவாலிபையரில் மதுரையை வென்று திண்டுக்கல் அணி பைனலுக்கு முன்னேறியது.

lyca kovai kings enters second qualifier of tnpl

நேற்று நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியும், ஐடிரீம்ஸ் காரைக்குடி காளை அணியும் மோதின.

புள்ளி பட்டியல்

முதலில் விளையாடிய கோவை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. அபினவ் முகுந்த் 51 ரன்கள் எடுத்தார். காரைக்குடியின் ராஜ்குமார் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

அடுத்து விளையாடிய காரைக்குடி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. மான் பாப்னா அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். கோவையின் டி. நடராஜன் 4, கே. விக்னேஷ் 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

இதன் மூலம் 24 ரன்களில் கோவை அணி வென்றது. இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிபையரில் மதுரை அணியை சந்திக்கிறது கோவை. அதில் வெற்றி பெறும் அணியே பைனலுக்கு முன்னேறும்.

Story first published: Friday, August 10, 2018, 11:05 [IST]
Other articles published on Aug 10, 2018
English summary
lyca kovai kings wins the eliminator and enters the second qualifier.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+