வருஷத்துக்கு ரூ. 140 கோடி... "பாதி கேப்டன்" ஆனாலும் பக்காவாக கல்லா கட்டும் டோணி!
மும்பை: புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான டோணி விளம்பரங்கள் மூலமாக கிட்டதட்ட ஆண்டுக்கு ரூபாய்.140 கோடி வரையில் சம்பாதித்து வருகின்றார்.
அவர் டெஸ்ட் கேப்டனாக இல்லாத நிலையிலும் கூட அவரது விளம்பர வருவாய் சற்றும் குறையவில்லையாம்.
கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டில் சம்பாதிப்பதை விட விளம்பரங்கள் மூலம் தான் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள்.

மங்காத புகழ் கொண்ட தங்கத் தலைவா:
டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று 8 மாதங்கள் ஆகிவிட்டாலும் டோணியின் புகழ் மங்கவில்லை. அவர் தான் விளம்பரம் மூலம் அதிகம் சம்பாதிக்கிறார்.

ரூ. 140 கோடி... காசு பணம் துட்டு:
ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டத்தின் கேப்டனான டோணி விளம்பரம் மூலம் ஆண்டுக்கு ரூபாய் 130 கோடி முதல் ரூபாய் 140 கோடி வரை சம்பாதிக்கிறார்.

கை நிறைய பிராண்டுகள்:
பெப்சி, ரீபெக், பூஸ்ட் உள்பட 15 விளம்பர நிறுவனங்கள் அவரது கைவசம் உள்ளது. ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அவரது விளம்பரங்களை கவனித்து வருகிறது. இதை அவரது நண்பன் நடத்துகின்றார்.

2வது இடம்தான் கோஹ்லிக்கு:
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக கோஹ்லி அதற்கு அடுத்த நிலையில் உள்ளார். அவருக்கு விளம்பரம் மூலம் ஆண்டுக்கு ரூபாய் 60 கோடி முதல் ரூபாய் 70 கோடி கிடைக்கிறது.

13 நிறுவனங்கள் கோஹ்லிக்கு:
டெஸ்ட் கேப்டனாக வலம் வரும் விராத் கோஹ்லியிடம், டி.வி.எஸ்., அடிடாஸ், பூஸ்ட், எம்.ஆர்.எப். உள்பட 13 நிறுவனங்கள் அவர் கைவசம் இருக்கிறது.

3வது இடத்தில் தவான்:
ஷிகர் தவான் ரூபாய் 6 கோடி முதல் ரூபாய் 7 கோடி வரையிலும், ரோகித்சர்மா ரூபாய் 4 கோடி முதல் 5 கோடி வரையிலும், ரெய்னா, அஸ்வின் ரூபாய் 2 கோடி முதல் 3 கோடி வரையிலும், ரகானே ரூபாய் 2 கோடியும் ஆண்டுக்கு விளம்பரம் மூலம் சம்பாதிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications