ரூ. 25 கோடிக்கு டோணியை ஒப்பந்தம் செய்த ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ், அமிட்டி பல்கலைக்கழகம்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ் மற்றும் அமிட்டி பல்கலைக்கழகத்துடன் ரூ.25 கோடிக்கான பேட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி பல்வேறு நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார். இந்நிலையில் அவர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒன்றின் பிராண்ட் அம்பாசிடராகியுள்ளார்.
ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ் மற்றும் அமிட்டி பல்கலைக்கழகம் ஆகியவை டோணியை தங்களின் பிராண்ட் அம்பாசிடராக ஆக்கியுள்ளன.

ரூ. 25 கோடி
டோணி தற்போது ஸ்பார்டன் பேட்டை பயன்படுத்தி வருகிறார். அதில் அமிட்டி பல்கலைக்கழகத்தின் லோகோவும் ஒட்டப்பட்டுள்ளது. இதற்காக ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ் மற்றும் அமிட்டி பல்கலைக்கழகம் டோணிக்கு ஆண்டுக்கு ரூ. 25 கோடி அளிக்கவிருக்கின்றன.

ரீபோக்
ஸ்பார்டன் பேட்டுக்கு முன்பு ரீபோக் நிறுவன பேட்டை பயன்படுத்தி வந்தார் டோணி. அப்போது ரீபோக் அவருக்கு ஆண்டுக்கு ரூ.6 கோடி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

7 பை எம்எஸ்டி
ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ் 7 பை எம்எஸ்டி என்ற பெயரில் ஸ்போர்ட்ஸ் பொருட்களை தயாரித்து விரைவில் மார்க்கெட்டில் விடவிருக்கிறது. இந்த பொருட்களை விளம்பரம் படுத்த டோணியின் நேரடி பங்களிப்பு பெரிதும் உதவும் என்று ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது.

டோணி
டோணியின் பேட்டில் அமிட்டி பல்கலைக்கழக லோகோவும் இருக்கும். எப்பொழுதும் முதலிடத்தில் என்ற அமிட்டி பல்கலைக்கழகத்தின் தாரக மந்திரம் டோணி கேப்டனாக சாதித்து வருவதற்கு மிகவும் பொருந்தும் என்று அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications