Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னோட பலம், ஆட்டம் பத்தியெல்லாம் மஹி பாய்க்கு நல்லாவே தெரியும்... புஜாரா உற்சாகம்

டெல்லி : இந்த ஐபிஎல் 2021 சீசனில் சிஎஸ்கே அணியில் இணைந்து விளையாடவுள்ளார் சத்தீஸ்வர் புஜாரா.

இதையொட்டி மும்பையில் துவங்கவுள்ள பயிற்சி முகாம்களில் அவர் பங்கேற்கவுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய பலம் மற்றும் ஆட்டம் குறித்து தோனிக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னையில் பயிற்சி

சென்னையில் பயிற்சி

ஐபிஎல் 2021 சீசனுக்காக பல்வேறு வகைகளில் தன்னை தயார்படுத்தி வருகிறது சிஎஸ்கே. தொடரின் துவக்கம் குறித்த அறிவிப்புக்கு முன்னதாகவே தங்களது பயிற்சி முகாம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, கடந்த சில தினங்களாக பயிற்சிகளை சென்னையில் நடத்தியது.

மும்பைக்கு மாற்றம்

மும்பைக்கு மாற்றம்

இதையடுத்து ஹோம் அட்வான்டேஜ் இல்லாத நிலையில் வரும் 27, 28 தேதிகளில் தங்களது பயிற்சிகளை மும்பைக்கு மாற்றவுள்ளது. இந்த பயிற்சி முகாம்களில் சுரேஷ் ரெய்னா மற்றும் புதிதாக அணியில் இணைந்துள்ள சத்தீஸ்வர் புஜாரா ஆகியோர் இணையவுள்ளனர்.

புஜாரா நன்றி

புஜாரா நன்றி

இந்நிலையில் தன்மீது நம்பிக்கை வைத்து தன்னை அணியில் இணைத்துள்ள சிஎஸ்கே அணி மற்றும் நிர்வாகத்திற்கு புஜாரா நன்றி தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு சிறப்பான சாதனைகள் உள்ள நிலையில், அணியில் இணைந்து தான் அதிகமாக கற்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோனி குறித்து புஜாரா பாராட்டு

தோனி குறித்து புஜாரா பாராட்டு

தன்னுடைய பலம் மற்றும் தன்னுடைய ஆட்டம் குறித்து தோனிக்கு அதிகமாகவே தெரியும் என்று கூறியுள்ள புஜாரா, தோனியின் சிறப்பான கேப்டன்ஷிப் குறித்து தான் எதுவும் அதிகமாக கூறத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். சிஎஸ்கே தனது முதல் போட்டியை மும்பையில் வரும் ஏப்ரல் 10ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, March 25, 2021, 19:13 [IST]
Other articles published on Mar 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+