Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதிர்பார்க்கப்பட்ட வீரர்.... இன்னைக்கு போட்டியில விளையாடறாரு... மகிழ்ச்சியில் சன்ரைசர்ஸ்

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன.

Recommended Video

SRHல் இனி அதிரடிக்கு Kane Williamson அமைதிக்கு Kedar jadhav |Oneindia Tamil

ஐபிஎல் 2021 தொடரின் புள்ளிகள் பட்டியலில் இறுதியில் உள்ள இந்த இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் கட்டாயத்தில் உள்ளன.

இந்நிலையில் இரு அணிகளிலும் வெற்றியை மனதில் வைத்து சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எஸ்ஆர்எச் அணியில் முக்கியமான வீரர் இன்றைய போட்டியில் விளையாடவுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்

பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டி சென்னை சிதம்பரம்மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையில் துவங்கியுள்ளது. போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

8வது இடத்தில் சன்ரைசர்ஸ்

8வது இடத்தில் சன்ரைசர்ஸ்

இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலும் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் புள்ளிகள் அடிப்படையில் 7வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றிகள் எதுவுமின்றி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியுற்று இறுதி இடத்தில் உள்ளது.

கேன் வில்லியசம்சன் இணைந்துள்ளார்

கேன் வில்லியசம்சன் இணைந்துள்ளார்

இதையடுத்து இரு அணிகளுமே இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்றைய போட்டியையொட்டி இரு அணிகளிலும் வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முக்கியமான மாற்றமாக சன்ரைசர்ஸ் ஐதராபாத்தில் கேன் வில்லியசம்சன் இணைந்துள்ளார்.

தீர்வு காண வழிவகை

தீர்வு காண வழிவகை

இதன்மூலம் அந்த அணியின் மிடில் ஆர்டர் பிரச்சினைக்கு வழிவகை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கேதார் ஜாதவும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். சமத் மற்றும் நடராஜன் இருவரும் காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை. மணீஷ் பாண்டேவிற்கு பதிலாக கௌல் இன்றைய போட்டியில் விளையாடுகிறார்.

ஆலன், ஹென்ரிக்ஸ் அறிமுகம்

ஆலன், ஹென்ரிக்ஸ் அறிமுகம்

இதேபோல பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஜய ரிச்சர்ட்சன், மெரிடித், சக்சேனா, முருகன் அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் இன்றைய போட்டியில் விளையாடவுள்ளனர். பேபியன் ஆலன் மற்றும் மோய்சஸ் ஹென்ரிக்ஸ் ஆகியோர் இன்றைய தினம் அந்த அணிக்காக தங்களது அறிமுக போட்டியில் விளையாடவுள்ளனர்.

Story first published: Wednesday, April 21, 2021, 16:38 [IST]
Other articles published on Apr 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+