மரகானாவா? மோடியா? முடிவு ஜெர்மனி கால்பந்து அணியின் கையில்!
டெல்லி: ஜெர்மனி கால்பந்து அணி உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றால் அப்போட்டியைக் காணவே ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்கெல் முக்கியத்துவம் தருவார் என்றும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
பிரிக்ஸ் மாநாட்டிற்காக ஜூலை 15 ஆம் தேதி அன்று பிரேசில் செல்ல உள்ளார் மோடி.
அப்போது, அவருக்கு விருந்தளித்துப் பேச்சுவார்த்தை நடத்த ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் முடிவு செய்துள்ளார்.

குறுக்கே புகுந்த உலகக் கோப்பை:
ஆனால் தற்போது உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி இடையில் வந்து நிற்கிறது.

கால்பந்து ரசிகை:
மெர்கெல் ஒரு தீவிர கால்பந்து ரசிகை. அவரது நாட்டு அணி அரை இறுதிப் போட்டியில் இன்று பிரேசிலைச் சந்திக்கிறது.

வென்றால் சிக்கல்:
இப்போட்டியில் வென்றால் ஜெர்மனி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அப்படி அது முன்னேறினால், மோடி சந்திப்பை ரத்து செய்து விட்டு பிரேசிலின் மரகானாவில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு மெர்கெல் போய் விடுவார் என்று கூறப்படுகிறது.

வீரர்களின் "கால்களில்":
எனவே இன்று பிரேசிலை ஜெர்மனி எதிர்கொண்டு ஆடுவதைப் பொறுத்துதான் மெர்கெல், மோடி சந்திப்பு நடைபெறுமா, நடைபெறாதா என்பது தெரிய வரும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications