பென் ஸ்டோக்ஸ் மனைவி பற்றி அசிங்கமாக பேசிய சாமுவேல்.. கொதித்து எழுந்த வார்னே.. ஷாக்கிங் சண்டை!
துபாய்: மூத்த கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேருக்கு இடையில் ஐபிஎல் தொடருக்கு இடையே மோதல் ஏற்பட்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2020 ஐபிஎல் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ராஜஸ்தான் அணியின் ஆலோசகராக ஷேன் வார்னே செயல்பட்டு வருகிறார். அதே ராஜஸ்தான் அணியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் விளையாடி வருகிறார்.
கொரோனா காரணமாக கிரிக்கெட் வீரர்கள் எல்லோரும் ஒவ்வொரு தொடருக்கும் முன் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். ஒரு வாரம் முதல் 14 நாட்கள் வரை கிரிக்கெட் வீரர்கள் இப்படி தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

நியூசிலாந்து
அதிலும் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் இந்த முறை இரண்டு தடவை தனிமைப்படுத்தப்பட்டார். முதலில் இங்கிலாந்தில் இருந்து நியூஸிலாந்திற்கு இவர் தனது அப்பாவை பார்க்கக் சென்றார். அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். அதன்பின் மீண்டும் ஐபிஎல் தொடருக்கு வந்தவர் துபாயில் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டார்.

என்ன சொன்னார்
இதனால் நீண்ட நாட்கள் தனியாக இருந்த பென் ஸ்டோக்ஸ் அது குறித்து உணர்சிகரமாக பேசி இருந்தார். அதில், இந்த தனிமைப்படுத்துதல் மிகவும் மோசமான விஷயம். நான் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். என்னுடைய எதிரிக்கும் இப்படி ஒரு நிலை வர கூடாது. மேற்கு இந்திய தீவுகள் வீரர் மார்லன் சாமுவேலுக்கு கூட இப்படி ஒரு நிலை வர கூடாது என்று பென் ஸ்டோக்ஸ் குறிப்பிட்டு இருந்தார்.

பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாமுவேல் இடையே நிறைய முறை மைதானத்தில் மோதல் வந்துள்ளது. இதனால் விளையாட்டிற்கு சாமுவேல்ஸ் பற்றி பென் ஸ்டோக்ஸ் பேசினார். ஆனால் இதற்கு சாமுவேல் மிகவும் கடுமையாக பதில் அளித்தார். இதுதான் மோதலுக்கு காரணமாகி உள்ளது. பென் ஸ்டோக்ஸ் கருத்துக்கு பதில் அளித்த சாமுவேல்.. என்னை பென் ஸ்டோக்ஸ் சீண்டுகிறார். தேவையில்லாமல் பேசுகிறார்.

பென் ஸ்டோக்ஸ் மனைவி
பென் ஸ்டோக்ஸ் அவரின் மனைவியை என்னிடம் அனுப்பி வைக்கட்டும் என்று குறிப்பிட்டு.. அதன்பின் நிறைய மோசமான பாலியல் விமர்சனங்களை சாமுவேல் செய்து இருந்தார். பென் ஸ்டோக்ஸ் மனைவி குறித்து சாமுவேல் கடுமையாக பேசியது பெரிய சர்ச்சையானது. இந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் ஆலோசகர் முன்னாள் வீரர் ஷேன் வார்னே இதை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

விமர்சனம்
அதில், சாமுவேல் எல்லை மீறி செல்கிறார். அவருக்கு உதவி தேவைப்படுகிறது. அவருக்கு நண்பர்களே இல்லை. முன்னாள் மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர்களே அவரை விரும்புவது இல்லை. அவரை யாருமே மதிப்பது இல்லை, அவருக்கு யாராவது உதவி செய்ய வேண்டும், என்று ஷேன் வார்னே குறிப்பிட்டு இருந்தார். இதனால் தற்போது வார்னே சாமுவேல் இடையே சண்டை முற்றி உள்ளது.

பதிலடி
இதற்கு தற்போது சாமுவேல் பதிலடி கொடுத்து உள்ளார். அதில், எனக்கு உதவி தேவை இல்லை. நீங்கள்தான் கிரிக்கெட் பயிற்சி என்று கூறி பலரிடம் உதவி கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் முகத்தை நீங்கள்தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றிக்கொண்டீர்கள்.. நான் என்னை மாற்ற வேண்டியது இல்லை. நீங்கள் எனக்கு அறிவுரை கூற வேண்டாம், என்று சாமுவேல் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications