Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வயிற்றெரிச்சல் பிடித்த வார்னேவுக்கு பேட்டால் பதில் சொல்லிவிட்டேன்: சாமுவேல்ஸ்

கொல்கத்தா: ஷேன் வார்னேவுக்கு, மைக்கால் இன்றி, பேட்டால் பதில் சொல்லிவிட்டேன் என்று மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் மார்லன் சாமுவேல்ஸ் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் 85 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார் சாமுவேல்ஸ். ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், களத்தில் நங்கூரம் போட்டு தாக்கு பிடித்து அணியை மீட்டார் சாமுவேல்ஸ்.

தன்னை சிறப்பாக ஆட தூண்டியது ஆஸ்திரேலிய முன்னாள் ஸ்பின் பவுலர் ஷேன் வார்னேயின் சீண்டல்கள்தான் என்று சாமுவேல்ஸ் நிருபர்களிடம் தெரிவித்தார்.

பனிப்போர்

பனிப்போர்

சாமுவேல்ஸ் மற்றும் ஷேன் வார்னே நடுவே நீண்ட காலமாக பனிப்போர் நடந்து வருகிறது. 2013ல் நடந்த பிக்பாஷ் தொடராகட்டும், இந்தியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியாகட்டும், சாமுவேல்சை ஷேன் வார்னே, சூடேற்றும் வகையில் விமர்சனம் செய்திருந்தார்.

காரணம் என்ன

காரணம் என்ன

இதுகுறித்து நேற்று சாமுவேல்ஸ் கூறுகையில், என்மீது வார்னே, மிகுந்த காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளார். இவரது இந்த செயல்பாட்டுக்கான காரணம் எனக்கு தெரியவில்லை. மனதுக்குள் நிறைய அழுக்குகளை வைத்துள்ள வார்னே அதை வெளியே கொட்ட வேண்டும்.

பேட்டால் பதில்

பேட்டால் பதில்

வார்னே தொடர்ந்து கமாண்டரியில் என்னை பற்றி தரக்குறைவாக பேசிவந்தார். ஆனால் நான் மைக்கில் பதில் சொல்பவன் கிடையாது. பேட்டால் பதில் கூறிவிட்டேன்.

கடைசி வரை நின்றேன்

கடைசி வரை நின்றேன்

வார்னேயின் விமர்சனங்கள்தான் எனக்குள் உத்வேகத்தை ஏற்படுத்தி, இறுதி போட்டியில் சிறப்பாக ஆடும் வேகத்தை கொடுத்தது. கடைசி வரை களத்தில் நின்று மே.இ.தீவுகள் வெற்றியை உறுதி செய்துள்ளேன்.

அதிரடி

அதிரடி

பென் ஸ்ட்ரோக் கடைசி ஓவரில் எப்படியும் 2 ஃபுல்டாஸ் வீசுவார். அதை அடித்து நொறுக்குங்கள் என்று பிராத்வெயிட்டிடம் கூறியிருந்தேன். பிராத்வெயிட்டின் ஆட்டம் எனக்கு நிம்மதியை கொடுத்துவிட்டது. இவ்வாறு சாமுவேல்ஸ் தெரிவித்தார்.

Story first published: Monday, April 4, 2016, 12:46 [IST]
Other articles published on Apr 4, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+