சாரா டெண்டுல்கர்.. ஆட்டத்திற்கு நடுவே சுப்மான் கில்லை சீண்டிய ஆஸி. வீரர்.. சச்சின் பற்றி பரபர கேள்வி
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஓப்பனிங் வீரர் சுப்மான் கில்லை ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் கிண்டல் செய்த விதம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்த நிலையில் தற்போது இந்திய அணி 88 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. ஓப்பனிங் வீரர் ரோஹித் சர்மா 26 ரன்களுக்கும், அரை சதம் எடுத்திருந்த நிலையில் சுப்மான் கில்லும் அவுட் ஆனார்கள்.

அவுட்
பரபரப்பாக சென்று கொண்டு இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஓப்பனிங் வீரர் சுப்மான் கில்லை ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் கிண்டல் செய்த விதம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சுப்மான் கில் பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது அவரிடம் மார்னஸ் விதவிதமான கேள்வி கேட்டு கிண்டல் செய்து கொண்டு இருந்தார்.

கிண்டல்
அதில் சுப்மான் கில்லிடம்.. உங்களுக்கு பிடித்த வீரர் யார் என்று மார்னஸ் கேள்வி எழுப்பினார். இதற்கு நான் பிறகு பதில் சொல்கிறேன் என்று சுப்மான் கில் பதில் அளித்தார். ஆனால் சுப்மான் கில்லை விடாமல் வம்பிழுத்த மார்னஸ், உங்களுக்கு சச்சின்தானே பிடிக்கும்.. இல்லை விராட் பிடிக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

ஏன்
சுப்மான் கில்லிடம் சச்சின் குறித்து மார்னஸ் கேள்வி எழுப்ப முக்கிய காரணம் உள்ளது. சச்சின் மகள் சாராவுடன் சுப்மான் கில் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. சுப்மான் கில் புகைப்படத்தை சாரா ஐபிஎல் நேரத்தில் பகிர்ந்ததும் வைரலாகி இருந்தது. இந்த நிலையில்தான் சச்சின் குறித்து சுப்மான் கில்லிடம் மார்னஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

மார்னஸ் கேள்வி
இதன் காரணமாகவே சுப்மான் கில்லை சீண்டும் விதத்தில் மார்னஸ் அப்படி கேள்வி எழுப்பி உள்ளார். சச்சின் குறித்து கேள்வி எழுப்பியதும் சுப்மான் கில் எந்த பதிலும் சொல்லவில்லை. அமைதியாக ஆட்டம் மீது கவனம் செலுத்தியதும் வைரலாகி உள்ளது.


Click it and Unblock the Notifications